மர்மகோவா கோட்டை
மர்மகோவா கோட்டை (Mormugão fort) இந்தியாவின் மேற்கு கடற்கரையிலுள்ள கோவா மாநிலத்தில் உள்ள மர்மகோவா நகரில் பாயும் சுவாரி ஆற்றின் தெற்கு முனையில் அமைந்துள்ளது.[1]
வரலாறு
தொகுஇந்த அரண் போர்த்துகீசிய இந்திய மாநிலத்தின் வைசுராய் நான்காவது விடிகுவேரா டோம் பிரான்சிசுகோ டா காமா, அவரது இரண்டாவது அரசாங்கத்தின் போது, அப்போது இந்திய மாநிலத்தின் தலைநகராக இருந்த தெற்கு கோவாவைப் பாதுகாப்பதற்காக கட்டப்பட்டதாகும். [2]
பண்டைய கல்வெட்டுகளின் படி, இவரது படைப்புகள் 1624 ஆம் ஆண்டில் தொடங்கின. அந்த நூற்றாண்டில், கோவாவின் பழைய நகரத்தை ஆக்கிரமித்த தொடர்ச்சியான கொள்ளைநோய்கள் மற்றும் தாக்குதல்கள் காரணமாக, வைசுராய்கள் போர்த்துகீசிய இந்தியாவின் தலைநகரை ( ஆண்டியா போர்த்துகீசா ) மர்மகோவாவிற்கு மாற்ற நினைத்தனர். அதற்காக சில கட்டிடங்கள் கட்டப்பட்டன. அதிகமான திட்ட செலவுகள் காரணமாக திட்டம் கைவிட வழிவகுத்தது. [3]
1737 ஆம் ஆண்டு மராட்டியர்களின் படையெடுப்பின் போது இப்பகுதி இழக்கப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தற்போது பன்சிம் என அறியப்படும் நோவா கோவா புதிய தலைநகராக மாறியது.
தற்போது, மர்மகோவா கோட்டை மிகவும் சிதிலமடைந்துள்ளது.
சிறப்பியல்புகள்
தொகுமர்மகோவா கோட்டை ஒரு செவ்வக வடிவத் திட்டத்தைக் கொண்டிருந்தது. 330, 88 மீட்டர் நீள அகல பரிமாணங்கள் கொண்டு நிலப்பக்கத்தில் ஐந்து பக்கங்களும் கடல் பக்கத்தில் நாற்கரவடிவமும் கொண்டிருந்தது. உள்ளே சேவை கட்டிடங்கள் நின்றன. ஒரு வட்ட கோபுரம் கோட்டையிலிருந்து துறைமுகத்திற்கு அணுகலை கொடுத்தது. [4]
நூல் பட்டியல்
தொகு- AZEVEDO, Carlos de. A Arte de Goa, Damão e Diu. Lisboa: Comissão Executiva do V Centenário do Nascimento de Vasco da Gama (1469-1969), 1970. plantas, fotos p/b.
மேற்கோள்கள்
தொகு- ↑ Chilka, Amit (2014-09-08). Sea Forts of India (in ஆங்கிலம்). Osmora Incorporated. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9782765903611.
- ↑ Abram, David (2003). Goa (in ஆங்கிலம்). Rough Guides. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781843530817.
- ↑ Scholberg, Henry (1995). Fortress Portugal in India: a photographic history of the Portuguese forts of India (in ஆங்கிலம்). NorthStar Publications. p. 39.
- ↑ Goa (in ஆங்கிலம்). Outlook Pub. 2004. p. 232. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788190172493.