மறுபக்கம் (புதினம்)

எழுத்தாளர் பொன்னீலனின் கரிசல், புதியதரிசனங்கள் ஆகிய புனைவுகளைத் தொடர்ந்து மறுபக்கம் புதினம் 2010இல் வெளிவந்தது. 1972இல் எழுதத் தொடங்கி 2010இல் இவர் இந்நாவலை வெளியிட்டார்.இப்புதினத்திற்குரிய வரலாற்றுத் தரவுகளாக இவர் பயன்படுத்தியது வி. நாகமய்யா, டி.கே. வேலுப்பிள்ளை ஆகிய திருவாங்கூர் உயர் அதிகாரிகள் எழுதிய திருவாங்கூர் மாநிலக் குறிப்பேடுகள்[1](Travancore State Manual) மற்றும் நீதிபதி பி. வேணுகோபால் விசாரணைக்குழு அறிக்கை. இத்தரவுகளின்வழிச் சேகரிக்கப்பட்ட சமூக அசைவுகளின் தொடர்ச்சியாக 1982 இல் நடந்த மண்டைக்காட்டுக் கலவரத்தையும் ஆசிரியர் இணைத்துக்கொள்கிறார்.[2]

களம்

தொகு

புதினத்தின் களமாக இருப்பது தென்திருவிதாங்கூர் மற்றும் அதனைச் சுற்றிய கிராமங்கள். பண்பாட்டுக்கலப்பு மற்றும் பல்வேறு அரசியல் முரண்பாடுகள் நிலவுகின்ற நிலப்பகுதி. வருணாசிரம தர்மம், காலனிய ஆதிக்க வரிஏய்ப்பு வன்முறைகள், கிறித்துவத்தின் பரவல் மற்றும் செயல்பாடுகள், பாரம்பரிய தாய்த்தெய்வ வழிபாட்டின் எச்சங்கள் என ஏராளமான பன்முகத்தன்மைகளின் பாதிப்புக்கு உள்ளான மக்கட் சமூகம் வாழ்கின்ற பகுதி. இப்பகுதி மீதான பல அடுக்குநிலைப் பார்வைகளை இப் புதினம் வைத்துள்ளது.[2]

வரலாற்றுக் குறிப்புகளும் புராணச் செய்திகளும்

தொகு

திருவிதாங்கூர் சமஸ்தான வரிவிதிப்புக் கொடுமைகள், தோள் சீலைப் போராட்டம் என அறியப்பட்ட சாணார்கள் போராட்டம், வைகுண்டசாமி அய்யாவழி இயக்கம், குமாரகோவில் அக்கினிக்காவடிப் போராட்டம், பிரம்ம சமாஜ இயக்கம், அக்கினிக் காவடி போராட்டம், கன்னியாகுமரி மாவட்டத்தைத் தமிழ்நாட்டுடன் இணைப்பதற்காக நடைபெற்ற போராட்டம், மணியங்கர எதிர்ப்புப் போராட்டம், உலக்கைப் போராட்டம், பற்றிய செய்திகள் உள்ளிட்ட எல்லா வரலாற்றுக் குறிப்புகளும், மண்டைக் காட்டு அம்மன் வரலாறு, பத்ரகாளி அம்மன் வரலாறு, குமரி அம்மன் வரலாறு எனப் புராணச் செய்திகளும் இப் புதினத்தில் இடம்பெற்றுள்ளன.[3][4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Travancore State Manual". பார்க்கப்பட்ட நாள் 04 நவம்பர் 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. 2.0 2.1 "மறுபக்கம்-பொன்னீலன் (இருட்டடிப்புச் செய்யப்பட்ட வரலாறுகளின் மறுபக்கம்) - அ.மோகனா". திண்ணை. 12 December 2010. Archived from the original on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 04 நவம்பர் 2013. {{cite web}}: Check date values in: |accessdate= and |archive-date= (help)
  3. "மதமும் மனிதனும்". காலச்சுவடு. Archived from the original on 2013-06-01. பார்க்கப்பட்ட நாள் 04 நவம்பர் 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "பொன்னீலன் எழுதிய மறுபக்கம் நாவல் கலைநயம் மிளிறும் ஆவணப் பெட்டகம்". விடுதலை. 28 ஆகஸ்ட் 2011. பார்க்கப்பட்ட நாள் 04 நவம்பர் 2013. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மறுபக்கம்_(புதினம்)&oldid=3578004" இலிருந்து மீள்விக்கப்பட்டது