மலங்கரா அணை
மலங்கரா அணை (Malankara Dam) என்பது நீர்ப்பாசன நோக்கங்களுக்காக கேரளத்தின், மூவாற்றுப்புழை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ஈர்ப்பு அணை ஆகும். மூலமட்டம் மின் நிலையத்திலிருந்து வெளியேறும் நீரைப் பயன்படுத்த இந்த அணை கட்டப்பட்டுள்ளது. இந்த திட்டமானது மூவாட்டுபுழா பள்ளத்தாக்கு நீர்ப்பாசன திட்டத்தில் கேரள மாநில மின்சார வாரியத்தின் கீழ் இயங்குகிறது. இந்த அணையினால் உருவான செயற்கை ஏரி சுமார் 11 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது.
மலங்கரா அணை | |
---|---|
நாடு | இந்தியா |
அமைவிடம் | இந்தியா, கேரளம், தொடுபுழா |
புவியியல் ஆள்கூற்று | 9°51′10″N 76°44′41″E / 9.85278°N 76.74472°E |
நிலை | செயல்பாட்டில் உள்ளது |
அணையும் வழிகாலும் | |
வகை | Gravity concrete |
சுற்றுலா
தொகுநீர்பாசன நோக்கத்திற்காக, மூவாட்டுபுழா ஆற்றின் துணை ஆறான தொடுபுழா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இந்த நீர்த்தேக்கம் ஒரு சுற்றுலாத் தலமாகவும் உள்ளது. [1] [2] இந்த செயற்கை ஏரி தொடுபுழா - மூலமட்டம் சாலை (மாநில நெடுஞ்சாலை 33) [3] அருகில் 11 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த நீர்த்தேக்கம் படகு மற்றும் மீன்பிடிக்க ஏற்றது. [4] இடுக்கி அணை மற்றும் செறுதோணி அணைக்கட்டு போன்றவையல்லாமல், மலங்கரா அணை ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகளுக்கு திறந்திருக்கும். அருகிலுள்ள 15 ஏக்கர் தீவை உள்ளடக்கிய நீர்த்தேக்கத்திற்கு அருகில் ஒரு பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. [5]
குறிப்புகள்
தொகு- ↑ "Kerala Tourism, Official website".
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-11-09. பார்க்கப்பட்ட நாள் 2020-01-27.
- ↑ "Idukki district official website". Idukki District of Kerala - An Official Website. Archived from the original on 12 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 4 May 2016.
- ↑ "Idukki district official website". Idukki District of Kerala - An Official Website. Archived from the original on 12 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 4 May 2016.
- ↑ "The Hindu News Article". Malankara dam to be made a tourism spot- The Hindu. பார்க்கப்பட்ட நாள் 4 May 2016.