செறுதோணி அணைக்கட்டு
செறுதோணி அணை (Cheruthoni Dam) இந்தியாவில், கேரள மாநிலத்தில், இடுக்கி மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள 138 மீட்டர் உயரமான கான்கிரீட் அணையாகும். இந்த அணை இடுக்கி நீர்மின் திட்டத்திற்காக இடுக்கி மற்றும் குலமாவு ஆகியவற்றோடு மற்றொரு பகுதியாக கட்டப்பட்டது. இத்திட்டம் கனேடிய நிதி உதவியுடன் முடிக்கப்பட்டது. கனடா அரசு நீண்ட கால கடன்கள் மற்றும் மானியங்களுடன் இந்த திட்டத்திற்கு உதவியது. கனடாவின் எஸ்.என்.சி.ஐ.என்.சி. நிறுவன பொறியாளர்கள் திட்டப் பொறியாளர்களுக்கு ஆலோசனை மற்றும் உதவி செய்து வந்தனர்.[1][2]
செறுதோணி அனைக்கட்டு Cheruthoni Dam | |
---|---|
புவியியல் ஆள்கூற்று | 9°50′43″N 76°58′01″E / 9.84528°N 76.96694°E |
இடுக்கி, செருதோனி மற்றும் குலமாவு ஆகிய இந்த மூன்று அணைகளால் அடைத்து வைக்கப்பட்ட நீர் 60 சதுர கிலோமீட்டருக்கும் மேற்பட்ட பரப்பளவில், சராசரி கடல் மட்டத்திற்கு மேல் 2300 மீட்டர் உயரத்தில் ஒற்றை நீர்த்தேக்கத்தை உருவாக்கியுள்ளது.[3] இடுக்கி அணை என்பது பெரியார் ஆற்றின் குறுக்கே இரண்டு கிரானைட் மலைகளுக்கு இடையில் ஒரு குறுகிய பள்ளத்தாக்கில் கட்டப்பட்ட இரட்டை வளைவுகளைக் கொண்ட அணை ஆகும். இது ஆசியாவின் மிக உயரமான இரட்டை வளைவு கமான் அணை ஆகும். செருதோணி அணைக்கட்டு இடுக்கி அணைக்கு மேற்கே 1 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இடுக்கி நீர்த்தேக்கத்தின் கசிந்து வரும் நீரானது செருதோணி அணையில் சேகரமாகிறது. குலமாவு அணையானது கிலிவாலி என்றழைக்கப்படும் சிற்றாற்றின் வழியாக நீர் தப்பி விடுவதைத் தடுக்க இடுக்கி கமான் அணையிலிருந்து மேற்கில் 30 கிலோ மீட்டர் தொலைவில் கட்டப்பட்ட அணையாகும். இது 100 மீட்டர் உயரமுள்ள கல்கட்டு எடை ஈர்ப்பு அணை ஆகும். இந்த செருதோணி அணை, இடுக்கி வளைவு அணை மற்றும் குலமாவு அணை ஆகியவற்றின் கட்டுமானம் 60 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கான செயற்கை ஏரியை உருவாக்கியுள்ளது. மேலும், இங்கு சேமிக்கப்பட்ட நீரைப் பயன்படுத்தி, மூலமட்டம் மின் நிலையத்தில் மின்சார உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. மூலமட்டத்தில் உள்ள மின்நிலையம் இந்தியாவின் மிகப்பெரிய நிலத்தடி மின் நிலையமாகும். மேலும் இங்குள்ள அழுத்த உந்து தண்டானது நாட்டிலேயே மிகப்பெரியது ஆகும். செருதோணி கேரளாவின் மிகப்பெரிய மற்றும் மிக உயர்ந்த கல்கட்டு எட ஈர்ப்பு அணை ஆகும்.[4] இடுக்கி நீர்த்தேக்கத்தில் நீர் சேமிப்பு 1973 ஆம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கியது. மூலமட்டம் மின் நிலையம் 1976 ஆம் ஆண்டு பிப்ரவரியில் பிரதமர் இந்திரா காந்தியால் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
வெளியீடுகள்
தொகுமொத்தத்தில் மூன்று முறை, செருதோனியின் வெள்ள வாயில்கள் திறக்கப்பட வேண்டியிருந்தது; 1981 மற்றும் 1992 ஆம் ஆண்டின் வடகிழக்கு பருவமழையின் போது (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) இரண்டு முறை மற்றும் 2018 கேரள வெள்ளத்தின் போது ஒரு முறை. முதல் முறையாக 1981 ஆம் ஆண்டிலும் (அக்டோபர் 29 முதல் நவம்பர் 13 வரை அடைப்புப் பலகைகள் மீண்டும் மீண்டும் திறக்கப்பட்டன), இரண்டாவது முறையாக 1992 ஆம் ஆண்டிலும் (அவை அக்டோபர் 12 முதல் 23 வரை 12 நாட்கள் திறந்திருந்தன) மற்றும் சமீபத்தில் பெரும் வெள்ளத்தின் போதும் (2018 ஆகஸ்ட் 9 முதல் 2018 செப்டம்பர் 7 வரை அனைத்து 5 அடைப்புப் பலகைகளும் திறக்கப்பட்டன) திறக்கப்பட்டிருந்தன.
குறிப்புகள்
தொகு- ↑ "Idukki District of Kerala - An official website". idukki.nic.in. Archived from the original on 19 August 2015. பார்க்கப்பட்ட நாள் 17 April 2018.
- ↑ http://manojissacparayan.files.wordpress.com/2012/11/the-idukki-dam.pdf
- ↑ user. "Energy Sources". www.idk.kerala.gov.in. Archived from the original on 17 ஏப்ரல் 2018. பார்க்கப்பட்ட நாள் 17 April 2018.
{{cite web}}
:|last=
has generic name (help); Check date values in:|archive-date=
(help) - ↑ "Idukki Hydroelectric Project-- salient features". expert-eyes.org. பார்க்கப்பட்ட நாள் 17 April 2018.