மலபார் மரத்தேரை

ஒரு தேரை வகை
மலபார் மரத்தேரை
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: நீர்நில வாழ்வன
வரிசை: தவளை
குடும்பம்: Bufonidae
பேரினம்: Pedostibes
இனம்: P. tuberculosus
இருசொற் பெயரீடு
Pedostibes tuberculosus
Günther, 1876
வேறு பெயர்கள்

Nectophryne tuberculosus

மலபார் மரத்தேரை (Malabar tree toad) என்பது ஒரு தேரை ஆகும். இது இந்தியாவின் கோவா மாநிலத்துக்கு தெற்கில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள காடுகளில், ஈரமான மரப் பொந்துகள், நீர்நிலைகளுக்கு அருகில் உள்ள செடிகளின் இலைகளில் காணப்படுகிறது.

விளக்கம் தொகு

இந்த நடுத்தர அளவிலான தேரையாகும். இதற்கு கரு நிற கணுக்கணுவான உடலும், தோலிழை கொண்ட விரல்களும் கொண்டிருக்கும்.பொதுவாக, பெண் தேரைகள் ஆண் தேரைகளைவிட பெரியதாக இருக்கும். வளர்ந்த தேரைகள் 3.6-3.85 செ நீளம்வரை வளரும்.

பழக்கவழக்கம் தொகு

இந்த வகை இனங்கள் மரத்தை வாழ்விடங்களாக கொண்ட வாழ்வதாக அறியப்படுகிறது, பெரியவை இலைக் குப்பைகளில் காணப்படும். ஆனால் இரவில் மரங்களில் ஏறும். இவை மேற்கு தொடர்ச்சி மலையின் காடுகளில் 250 - 1000 மீட்டர் உயரத்தில் நீரோடைகள் உள்ள இடங்களில் காணப்படும். [1]

குறிப்புகள் தொகு

  1. Daniels, R.J. 2005. Amphibians of Peninsular India. City:Hyderabad. 116-117p.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலபார்_மரத்தேரை&oldid=2964255" இலிருந்து மீள்விக்கப்பட்டது