மலரவன்
மலரவன் (1972–1992)[2] என்பவர் ஒரு ஈழத்து எழுத்தாளர். இவரது கதைகள், கவிதைகள் கொண்ட நான்கு புத்தகங்கள் வட இலங்கையில் வெளிவந்திருந்தன. இவரது போர் உலா என்ற நினைவுக் குறிப்புக்காக மிகவும் பிரபலமானவர், இது பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு War Journey: Diary of a Tamil Tiger என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
மலரவன் | |
---|---|
பிறப்பு | 8 ஏப்ரல் 1972 |
இறப்பு | 23 நவம்பர் 1992[1] | (அகவை 20)
தேசியம் | இலங்கைத் தமிழர் |
பணி | தமிழ்ப் போராளி, எழுத்தாளர் |
துவக்ககால வாழ்க்கையும் கல்வியும்
தொகுஇவர் எழுத்தாளர் மலரன்னையின் இளைய மகன் மற்றும் மூத்த எழுத்தாளர் கச்சாயில் இரத்தினத்தின் தாய்வழி பேரனாவார். இவர் 1990 இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தார். புலிகள் இயக்கத்தில் செயல்பட்டபோது, இவர் குறிப்புகளை எழுதி வைத்திருந்தார், பின்னர் அது இவரது புத்தகமான போர் உலா நூலின் அடிப்படையாக இருந்தது. இவர் பசீலன் மோட்டார் படைப்பிரிவின் துணைப்பொறுப்பாளராவும் பின் யாழ் மாவட்ட மாணவர் அமைப்பு பொறுப்பாளராகவும் பணிபுரிந்தார் , 1992 ஆம் ஆண்டில் நடந்த போரில் உயிர் துறந்தார்.[3][2]
இவரது படைப்புகள்
தொகுவிடுதலைப் புலியாகப் போரில் மலரவனின் அனுபவங்களான போர் உலா நூல் இவர் இறந்த அடுத்த ஆண்டு வெளியானது.[4] இந்த புத்தகம் இலங்கை இலக்கிய பேரவையின் அகில இலங்கை ரீதியான இலக்கிய தேர்வில் முதல் பரிசு பெற்றது. இதுவரை தாயகத்திலும் பிறநாடுகளிலுமாக ஐந்து பதிப்புகளைப் பெற்றுள்ளது. தாயகத்திலும் வெளிநாட்டிலும் பல்வேறு பத்திரிகைகளில் தொடராக மீள்பிரசுரமாகியிருக்கிறது. (யாழ்) உதயன் ஞாயிறு சஞ்சிகையில் தொடராக மீள்பிரசுரமாகியதும் குறிப்பிடப்படவேண்டியது. "போர் உலா " தொடர் நாடகமாகவும் வானொலியில் ஒலிபரப்பப்பட்டுள்ளது. காட்டூன் வடிவிலும் பிரசுரமாகியுள்ளது. போர் உலாவின் ஆங்கில மொழி பெயர்ப்பை war journey என்ற பெயரில் கலாநிதி என். மாலதி மொழிபெயர்த்தார்.[5] பென்குயின் வெளியீட்டாளர்களால் war journey வெளியிடப்பட்டது.[2][6]
இவர் இறந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு, மலரவனின் ஹைக்கூ கவிதைகள் என்ற ஹைக்கூ தொகுப்பு நூல் 1998 இல் வெளியானது. அந்த ஆண்டு இவரது சிறுகதைகள், கவிதைகளின் தொகுப்பு (என் கல்லறையில் தூவுங்கள்) வெளியிடப்பட்டது.
இவரது புதினமான புயல் பறவை 2003 இல் வெளியானது.[3] வட கிழக்கு மாகாண சாகித்திய மண்டல பரிசு பெற்றது . இந்த புத்தகத்தின் இரண்டாவது பதிப்பு 2015 இல் இந்தியாவில் விடியல் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
பலவேகயா 2 ற்கு எதிரான சமரின் இராணுவ ரீதியிலான அழகியல் தொகுப்பே இவரின் இறுதியான பதிவாக இருக்கவேண்டும். இந்த ஆக்கம் தலைவர் பிரபாகரனுக்கு மிகப்பிடித்ததாக இருந்தபோதும் புலிகளின் இராணுவநலன்கருதி வெளியீடு ஆகியிருக்கவில்லை.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Penguin India brings out diary of LTTE captain". Tamilnet. 22 May 2013. பார்க்கப்பட்ட நாள் 2 July 2021.
- ↑ 2.0 2.1 2.2 "Sri Lanka: Book review: Malaravan, ‘War Journey: Diary of a Tamil Tiger’". South Asian Analysis, Paper No. 5554, 03-Sept-2013. Charles Ponnuthurai Sarvan.
- ↑ 3.0 3.1 Kannan M (18 December 2014). Time Will Write a Song for You: Contemporary Writing in Tamil from Sri Lanka. Penguin Books Limited. pp. 326–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5118-877-3.
- ↑ "Penguin India brings out diary of LTTE captain". TamilNet,
- ↑ "A heroic life after death", The Hindu, R. K. Radhakrishnan, July 8, 2013.
- "A writer who fought - and died - for Tamil Eelam". Business Standard, July 2, 2013. Also published in the Daiiji World.
- "War Journey Diary of a Tamil Tiger MOBI Malaravan N Malathy Find The Excellent", Hundreds of Novels, February 16, 2014 - ↑ "War journey : diary of a Tamil tiger" at WorldCat