மலாயக் குடிபெயர்வும் யாழ்ப்பாணச் சமூகமும் (நூல்)
மலாயக் குடிபெயர்வும் யாழ்ப்பாணச் சமூகமும் என்னும் நூல் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தொழில் காரணமாக யாழ்ப்பாணத்தவர் பலர் மலாயாவுக்குக் குடிபெயர்ந்து சென்றதனால் யாழ்ப்பாணச் சமூகத்தில் ஏற்பட்ட தாக்கங்கள் பற்றிய ஒரு ஆய்வு நூல் ஆகும். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத்துறைப் பேராசிரியரான சமாதிலிங்கம் சத்தியசீலன் இந்நூலை எழுதியுள்ளார். ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த அயோத்தி நூலக சேவை இந்த நூலை 2006 ஆம் ஆண்டில் வெளியிட்டது.
மலாயக் குடிபெயர்வும் யாழ்ப்பாணச் சமூகமும் | |
---|---|
நூல் பெயர்: | மலாயக் குடிபெயர்வும் யாழ்ப்பாணச் சமூகமும் |
ஆசிரியர்(கள்): | சமாதிலிங்கம் சத்தியசீலன் |
வகை: | வரலாறு |
துறை: | யாழ்ப்பாணச் சமூகம் |
காலம்: | 1870 - 1957 |
இடம்: | ஐக்கிய இராச்சியம் |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 323 |
பதிப்பகர்: | அயோத்தி நூலக சேவை |
பதிப்பு: | 2006 |
நூல் வரலாறு
தொகுஇந்த நூலின் அடிப்படை, இந்நூலாசிரியர் தனது முதுகலைப் பட்டத்துக்காகச் செய்த ஆய்வுகளும், அதனைத் தொடர்ந்து 1980 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்குச் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரையும் ஆகும். மேற்குறித்த ஆய்வுக்குரிய காலத்தின் பின் எல்லை 1940ல் இருந்து1957 வரை விரிவாக்கப்பட்டு இந்நூலில் கூடுதலான தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]
அண்மைக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து கனடா, ஆசுத்திரேலியா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளுக்குக் குடிப்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களுடைய வாழ்வில் காணப்படும் பண்புகளுக்கும், மலாயக் குடிபெயர்வுக் காலத்து வாழ்வில் கண்ட பண்புகளுக்கும் இடையே ஒத்த தன்மைகள் இருப்பதாகக் கூறும் நூலாசிரியர், இக்காலச் சூழலில் இந்த ஆய்வு, நூல் வடிவில் வெளிவரவேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்த நண்பர்கள் தன்னை ஊக்குவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.[2]
உள்ளடக்கம்
தொகுஇந்த நூலில் எடுத்துக்கொண்ட பொருள் குடிபெயர்ந்தமைக்கான காரணிகள், மலாயாவில் யாழ்ப்பாணத்தவர், அவர்களது வாழ்க்கை, மலாயத் தொடர்பும் யாழ்ப்பாணச் சமூகமும் ஆகிய தலைப்புக்களில் ஆராயப்பட்டுள்ளது. இதன் உள்ளடக்கம் ஒன்பது அத்தியாயங்களைக் கொண்டது. இவற்றுள் அறிமுகம், முடிவுரை என்பவற்றுக்கான அத்தியாயங்களைத் தவிர்த்து, எஞ்சிய ஏழு அத்தியாயங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளன.
- குடிப்பெயர்வுக்கான காரணிகள்
- அத்தியாயம் 2 - யாழ்ப்பாண மாவட்டத்தில் காணப்பட்ட நிலைமைகள்
- அத்தியாயம் 3 - மலாயாவில் காணப்பட்ட நிலைமைகள்
- மலாயாவில் யாழ்ப்பாணத்தவர்:
- அத்தியாயம் 4 - குடிப்பெயர்வும் குடித்தொகைப் பரம்பலும்
- மலாயாவில் யாழ்ப்பாணத்தவர் வாழ்க்கை:
- அத்தியாயம் 5 - பொருளாதார நடவடிக்கைகள்
- அத்தியாயம் 6 - அரசியல் நடவடிக்கைகள்
- அத்தியாயம் 7 - சமூக நடவடிக்கைகள்