மலிந்தா புஷ்பகுமர
பாவலுகே மலிண்டா புஷ்பகுமாரா,(Pawuluge Malinda Pushpakumara பிறப்பு 24 மார்ச் 1987) பொதுவாக மலிந்த புஷ்பகுமாரா என அறியப்படும் இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இவர் இலங்கை தேசிய அணி சார்பாக தேர்வு துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் ஆகிய போட்டிகளில் விளையாடி வருகிறார்.[1] கொழும்பு துடுப்பாட்ட சங்கம் அணிக்காக இவர் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். 2019 ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்தில் நடைபெற்ற ஒரு உள்ளூர் துடுப்பாட்ட போட்டி யின் ஒரு ஆட்ட பகுதியில் எதிரணியில் பத்து இழப்புகளையும் இவர் கைப்பற்றியதன் மூலம் பரவலாக அறியப்படுகிறார்.[2]
உள்ளூர் போட்டிகள்
தொகுஇவர் 2016–17 பிரீமியர் லீக் துடுப்பாட்டத்தில் இவர் கலந்து கொண்டார். அந்த போட்டித் தொடரில் ஒன்பது போட்டிகள் மற்றும் 18 ஆட்ட பகுதிகளில் விளையாடி மொத்தம் 77 இழக்குகளைக் கைப்பற்றினார். இதன் மூலம் அதிக இழப்புகளை கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார்.[3] நவம்பர் 2017 இல், இலங்கைத் துடுப்பாட்ட வாரியம் ஆண்டு விருதுகளில் 2016–17 ஆம் ஆண்டுகளில் இவர் சிறப்பாக விளையாடியதற்காக அந்த ஆண்டின் சிறந்த உள்ளூர் துடுப்பாட்ட பந்து வீச்சாளராக தேர்வு செய்யப்பட்டார்.[4]
இவர் 2017–18 பிரீமியர் லீக் போட்டித் தொடரில் இவர் சிறப்பாக விளையாடினர். அந்தத் தொடரில் 10 போட்டிகள் மற்றும் 20 ஆட்ட பகுதிகளில் விளையாடி 70 இழக்குகளை கைப்பற்றினார். இதன் மூலம் அதிக இழப்புகளை கைப்பற்றிய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் முதலிடம் பெற்றார்.[5] மார்ச் 2018 இல், இவர் 2017–18 சூப்பர் நான்கு மாகாண போட்டிகளுக்கான காலி துடுப்பாட்ட அணியில் இடம் பெற்றார் . அடுத்த மாதம், 2018 சூப்பர் மாகாண ஒருநாள் போட்டிக்கான காலி துடுப்பாட்ட அணியிலும் இவர் இடம் பெற்றார் . அந்தத் தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 15 இலக்குகளை கைப்பற்றினார் .இதன் மூலம் அதிக இலக்குகளை கைப்பற்றிய பந்துவீச்சாளர்களின் வரிசையில் முதலிடம் பெற்றார்.[6] ஆகஸ்ட் 2018 இல், கண்டி துடுப்பாட்ட அணியில் 2018 எஸ்.எல்.சி டி 20 லீக்கில் இவர் இடம் பெற்றார்.[7]
ஜனவரி 2019 இல், 2018–19 பிரீமியர் லீக் போட்டியில் கொழும்பு துடுப்பாட்ட சங்கம் சார்பாக விளையாடினார். அந்தத் தொடரில் சரசென்ஸ் ஸ்போர்ட்ஸ் சங்க அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது, புஷ்பகுமாரா போட்டியின் இரண்டாவது ஆட்ட பகுதியில் அனைத்து பத்து இலக்குகளையும் கைப்பற்றினார்.[2] இதன் மூலம் 2009 ஆண்டு முதல் நடைபெற்று வருகிற முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஒரு வீரர் ஒரு ஆட்ட பகுதியில் அனைத்து இலக்குகளையும் கைப்பற்றுவது இதுவே முதல் முறையாகும். மேலும் 1995 ஆண்டு முதல் சிறந்த பந்துவீச்சு ஆகவும் இது கருதப்படுகிறது.[8] அதே போட்டியில், இவர் தனது 700 வது முதல் தர இலக்குகளை எடுத்து, ஒரு ஆட்டப் பகுதியில் 10 இலக்குகளையும் எடுத்த இரண்டாவது இலங்கை பந்துவீச்சாளர் எனும் சாதனை படைத்தார்.இந்தத் தொடரில் 9 போட்டிகளில் விளையாடி 63 இலக்குகளை மொத்தமாக கைப்பற்றினார் .இதில் ஏழு முறை ஐந்து இலக்குகளைக் கைப்பற்றியுள்ளார்.
குறிப்புகள்
தொகு- ↑ "Malinda Pushpakumara". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 28 January 2016.
- ↑ 2.0 2.1 "Malinda Pushpakumara bags all 10 wickets in an innings". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 January 2019.
- ↑ "Records: Premier League Tournament Tier A, 2016/17: Most wickets". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 16 February 2017.
- ↑ "Gunaratne wins big at SLC's annual awards". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 1 November 2017.
- ↑ "Records: Premier League Tournament Tier A, 2017/18: Most wickets". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 February 2018.
- ↑ "2018 Super Provincial One Day Tournament". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 June 2018.
- ↑ "SLC T20 League 2018 squads finalized". The Papare. http://www.thepapare.com/slc-t20-league-2018-squads-finalized/. பார்த்த நாள்: 16 August 2018.
- ↑ "Malinda Pushpakumara takes ten wickets in an innings". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 6 January 2019.