மலேசியா எஸ். பாண்டியன்
மலேசியா எஸ். பாண்டியன் (S. Malaysia Pandian) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இந்தியத் தேசிய காங்கிரஸ் கட்சியினைச் சார்ந்த இவர் தமிழ்நாடு சட்டமன்ற முதுகுளத்தூர் தொகுதி உறுப்பினராவார்.[1][2][3]
இவர் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நன்கு பெயர் பெற்றவர். இவர் தனது சொந்த சமூகத்தின் உதவியுடன் தேர்தலில் வெற்றி பெற்றார். யாதவ மக்களின் பெரும்பான்மையான ஆதரவு இவரது வெற்றிக்குக் காரணமாக அமைந்தது. முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வென்றவர்களில் பலர் இந்தியத் தேசிய காங்கிரஸ் கட்சியினைச் சார்ந்தவர்கள். முன்னாள் இந்தியத் தேசிய காங்கிரஸ் தமிழ்நாடு தலைவர் சோ. பாலகிருஷ்ணன் இத்தொகுதியிலிருந்து வெற்றிபெற்றவர்.[4]
குறிப்புகள்
தொகு- ↑ "S PANDI (WON MUDHUKULATHUR)". ndtv.com. Retrieved 2017-03-13.
- ↑ "member of the Tamil Nadu Legislative Assembly". assembly.tn.gov.in. Archived from the original on 2017-03-13. Retrieved 2017-03-13.
- ↑ "Winner and Runnerup Candidate in Mudukulathur assembly constituency". elections.in. Retrieved 2017-03-13.
- ↑ Yadav, Pandian. "Malaysia pandian yadav".