மலேசியா டுடே

மலேசியா டுடே (Malaysia Today, மலேசியா இன்று) என்பது மலேசியாவில் புகழ்பெற்ற ஒரு வலைத் தளம் ஆகும். மலேசியாவின் ஆளும் கட்சியான பாரிசான் நேசனல், எதிர்க்கட்சிகளான ஜனநாயக செயல் கட்சி, சரவாக் தேசியக் கட்சி, மக்கள் நீதிக் கட்சி ஆகியவற்றின் குறை நிறைகளை ஆராய்வதில், இந்த வலத் தளம் சிறப்பு பெற்று விளங்குகிறது. இதன் ஆசிரியர் ராஜா பெத்ரா கமாருடின். இவர் மலேசியாவில் முன்னாள் அரசியல் கைதியாகும்.

2004 ஆகஸ்டு மாதம், இந்த வலைத்தளம் தோற்றுவிக்கப்பட்டதில் இருந்து, 100 மில்லியன் பேர் வருகை புரிந்துள்ளனர். மலேசியாவின் மிகப் பிரபலமான நியூ ஸ்ரேட்ஸ் நாளிதழின் வாசகர் எண்ணிக்கையைவிட இந்த வலைத்தளம் கூடுதலான வாசகர் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது.[1]

இப்போது நாள் ஒன்றுக்கு 1.5 மில்லியன் பேர் அந்த வலைத்தளத்திற்கு வருகை புரிகின்றனர் என்று மலேசியாவின் ‘தி ஸ்டார்’ நாளிதழ் கூறுகிறது. மலேசியாவின் தலைசிறந்த பத்து அரசியல் வலைத்தளங்களில் மலேசியா டுடே வலைத்தளமும் ஒன்றாகும். இந்த வலைத்தளம் மலேசியாவிற்கு அருகாமையில் இருக்கும் சிங்கப்பூரில் இருந்து தன் சேவையைத் தொடர்கிறது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசியா_டுடே&oldid=1552848" இலிருந்து மீள்விக்கப்பட்டது