மலேசிய மரத்தவளை
மலேசிய மரத்தவளை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
குடும்பம்: | இராணிடே
|
பேரினம்: | கைலரானா
|
இனம்: | கை. மலாயானா
|
இருசொற் பெயரீடு | |
கைலரானா மலாயானா (செரிடன் மற்றும் இசுடூவர்ட், 2018) | |
வேறு பெயர்கள் [1] | |
|
கைலரானா மலாயானா (Hylarana malayana), மலேசிய ஓடைத் தவளை, மலேசிய மரத்தவளை அல்லது மலேசிய இருண்ட பக்க தவளை, இராணிடே குடும்பத்தில் உள்ள ஒரு தவளை சிற்றினம் ஆகும். இது மியான்மர் மற்றும் இந்தியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[1][2]
வகைப்பாட்டியலாளர்கள் இந்த தவளையை சில்விரானா நிக்ரோவிட்டட்டாவின் சகோதர குழுவாகக் கருதுகின்றனர்.[1]
விளக்கம்
தொகுவயது முதிர்ந்த ஆண் தவளை 42.2 முதல் 48.8 மி.மீ. உடல் நீளமும், வயது முதிர்ந்த பெண் தவளை 47.2 முதல் 56.8 மி.மீ. நீளமும் உள்ளன. இந்த தவளை நடுத்தர-பழுப்பு நிறத்தில் சிறிய கரும்புள்ளிகளுடன் இருக்கும். இதன் உதடுகள் வெண்மையானவை. இதன் உடலின் ஒவ்வொரு பக்கத்திலும், மூக்கிலிருந்து இடை வரை பரந்த, இருண்ட பட்டை உள்ளது. இதன் வயிறு வெண்மையானது.[3]
இந்த தவளையின் தாடையில் வோமரின் பற்கள் மற்றும் ஏறுவதற்குக் கால்விரல்களில் வட்டுகள் உள்ளன. முதிர்ச்சியடைந்த பெண் தவளையை விட வயது வந்த ஆண் தவளை மிகவும் வலுவான முன் கால்களைக் கொண்டுள்ளது.[3]
இந்த தவளையைப் பற்றி முதல் கட்டுரையை எழுதிய அறிவியலாளர்கள், தீபகற்ப மலேசியாவில் வாழும் இதன் நெருங்கிய உறவினர்களில் ஒரே சிற்றினம் என்பதால் இதற்கு மலாயானா என்று பெயரிட்டனர்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Sylvirana malayana (Sheridan and Stuart, 2018)". Amphibian Species of the World 6.0, an Online Reference (American Museum of Natural History). https://amphibiansoftheworld.amnh.org/Amphibia/Anura/Ranidae/Sylvirana/Sylvirana-malayana. பார்த்த நாள்: May 15, 2022.
- ↑ "Sylvirana malayana". Amphibiaweb. பார்க்கப்பட்ட நாள் February 5, 2021.
- ↑ 3.0 3.1 3.2 Jennifer A. Sheridan; Brian L. Stuart (March 14, 2018). "Hidden species diversity in Sylvirana nigrovittata (Amphibia: Ranidae) highlights the importance of taxonomic revisions in biodiversity conservation" (in en). PLOS ONE 13 (3): e0192766. doi:10.1371/journal.pone.0192766. பப்மெட்:29538432. Bibcode: 2018PLoSO..1392766S.