மலேத்து சரளா தேவி
மலேத்து சரளா தேவி (Malethu Sarala Devi) என்பவர் (பிறப்பு அக்டோபர் 1943) இந்திய அரசியல்வாதியும் கேரள மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் மாநிலத் தலைவர் ஆவார். சரளா தேவி 2001-ல் கேரள சட்டமன்றத் தேர்தலில் அரண்முல்லா சட்டமன்றத் தொகுதியில் இதேகா வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2]
மலேத்து சரளா தேவி Malethu Sarala Devi | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர் கேரள சட்டமன்றம் | |
தொகுதி | அரண்முல்லா |
பதவியில் 2001–2006 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 2 அக்டோபர் 1943 |
துணைவர் | இரவீந்திரன் நாயர் |
பிள்ளைகள் | 1 மகன் |
பெற்றோர் | கொச்சு கேசவ பிள்ளை (தந்தை) பார்வதி பிள்ளை (தாய்) |
குடும்பம்
தொகுமலேத்து சரளா தேவியின் தந்தை கொச்சு கேசவ பிள்ளை தாயார் பார்வதி பிள்ளை ஆவார். இவர் 1943ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி இடையாரண்முலாவில் பிறந்தார். முதுகலை மற்றும் கல்வியியலில் இளநிலை பட்டம் பெற்ற தேவி உயர்நிலைப் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.[3]
விருதுகள்
தொகுசிறந்த சமூக சேவகிக்கான கான்பெட் சாரதா கிருஷ்ணாயர் மாநில விருதை 1989ஆம் ஆண்டு பெற்றார் . சிறந்த ஆசிரியருக்கான பாஷா அத்யபாகா மாவட்ட விருதினை 1989ஆம் ஆண்டு பெற்றார். சிறந்த சமூக சேவையாளருக்கான ஸ்ரீமதி கல்யாணிகுட்டியம்மா மாநில விருதினை 1994ஆம் ஆண்டு பெற்றார்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Members - Kerala Legislature". பார்க்கப்பட்ட நாள் 17 November 2019.
- ↑ "ഇനി ഇവർ നിയമസഭ കാണുമോ? പമ്പാ തീരത്ത് 3 വളവിനുള്ളിൽ 3 മുൻ എംഎൽഎമാർ!". Samayam Malayalam (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-15.
- ↑ 3.0 3.1 "Members - Kerala Legislature". www.niyamasabha.org. பார்க்கப்பட்ட நாள் 2023-04-23.