மலையக்க நகர்வு
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி மலை பிறப்பு கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
மலையாக்க நகர்வு
பூமியின் உள்பகுதியில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களுக்கு காரணம் உள் இயக்க சக்தி இது மெதுவாக நகர்தல் மற்றும் வேகமாக நகர்தல் என்ற இரு வகைகளில் செயல்படுகிறது மெதுவாக நகரும் போது நகர்தலானது செங்குத்தாக நகர்ந்தால் அது கண்ட ஆக்க நகர்வு எனவும், அதுவே கிடைமட்டமாக நகர்ந்தால் அது மலையாக்க நகர்வு என்று புவியியல் வல்லுநர்கல்ளா வரையறுக்கப்பட்டுள்ளது
கிடைமட்டமாக நகரும் புவியோடு மடிப்புகள் ஏற்படவும் மற்றும் பாறை அடுக்குகள் இடம் மாறுவதற்கும் காரணமாகிறது. சாதாரண மடிப்புகள் ஒரு மேல் வளைவையும் (Anticline) (Syncline)ஒரு கீழ் வளைவையும் கொண்டிருக்கும். மடிப்புகள் மென்மேலும் அழுத்தப்பட்டு பறை அடுக்குகள் நீண்ட தொலைவுக்கு இடம் பெயர்தலின் விளைவாக பல சிக்கலான மடிப்புகள் தோன்றுகின்றது .இவ்வகையில் புவியோடு மிகப்பெரிய அளவிற்கு கிடைமட்டமாக நகர்வதை மலையாக்க நகர்வு என்று வரையறுத்துள்ளனர். உலகின் மடிப்பு மலைகள் தோன்ற எதுவே காரணமாகும். இதற்கு உதாரணம் இமயமலை