மல்லிகா சீனிவாசன்
மல்லிகா சீனிவாசன் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆவார். டாபே (TAFE - Tractors and Farm Equipment Limited) எனும் டிராக்டர் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவராகவும், தலைமைச் செயலதிகாரியாகவும் உள்ளார். டிராக்டர் உற்பத்தி எண்ணிக்கையில் பார்க்கும்போது உலக அளவில் மூன்றாவது இடத்திலும், இந்திய அளவில் இரண்டாவது இடத்திலும் இந்நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனத்தின் டிராக்டர்கள் 82 நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.
மல்லிகா சீனிவாசன் Mallika Srinivasan | |
---|---|
பிறப்பு | 1959 ஆழ்வார்க்குறிச்சி, திருநெல்வேலி, தமிழ் நாடு, இந்தியா |
இருப்பிடம் | சிவகாசி, தமிழ் நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி நிறுவனம் - திருச்சி சென்னைப் பல்கலைக்கழகம் பென்சில்வேனியா பல்கலைக்கழகம் |
பணி | Industrialist |
அமைப்பு(கள்) | TAFE - Tractors and Farm Equipment Limited |
பட்டம் | Chairperson & CEO, TAFE |
இயக்குநராக உள்ள நிறுவனங்கள் | டாட்டா ஸ்டீல் டாட்டா தேனீர் and AGCO |
பெற்றோர் | A. Sivasailam Indira Sivasailam |
வாழ்க்கைத் துணை | வேணு சீனிவாசன் |
வலைத்தளம் | |
TAFE.com |
2021 ஆம் ஆண்டு மல்லிகா சீனிவாசன் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவன தேர்வு வாரியத்தின் (பிஇஎஸ்பி) தலைவராக நியமிக்கப்பட்டார். தனியார் திறையின் தலைவராக உள்ள ஒருவர் பொதுத்துறை நிறுவன தேர்வு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.[1]
பெற்ற விருதுகளும், சிறப்புகளும்
தொகுபத்மசிறீ விருது, 2014 [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ பொதுத்துறை தேர்வு வாரிய தலைவர் மல்லிகா சீனிவாசன்: நாட்டிலேயே முதல் முறையாக தனியார் துறையை சேர்ந்தவர் நியமனம், செய்தி, 2021, ஏப்ரல், 2, இந்து தமிழ்
- ↑ "YearWise List Of Recipients". இந்திய உள்துறை அமைச்சகம். 21 மே 2014 இம் மூலத்தில் இருந்து 2016-11-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161115022326/http://mha.nic.in/sites/upload_files/mha/files/YearWiseListOfRecipientsBharatRatnaPadmaAwards-1954-2014.pdf. பார்த்த நாள்: 12 நவம்பர் 2014.