வேணு சீனிவாசன் (தொழிலதிபர்)
வேணு சீனிவாசன் (Venu Srinivasan) ஒரு இந்திய தொழிலதிபர்; சுந்தரம் கிளேட்டன் லிமிடெட் மற்றும் இந்தியாவின் மூன்றாவது பெரிய இரண்டு சக்கர உற்பத்தியாளரான டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ளார். இவர் 2009-10 ஆண்டுக்கான இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவராகப் பணியாற்றியுள்ளார்[1][2][3] இந்தியாவின் மூன்றாவது உயரிய குடிமை விருதான பத்ம பூசன் விருது 2020 சனவரியில் இவருக்கு வழங்கப்பட்டது.[4][5]
வேணு சீனிவாசன் | |
---|---|
தேசியம் | இந்தியன் |
படித்த கல்வி நிறுவனங்கள் | சென்னை பல்கலைக்கழகம் பர்டியூ பல்கலைக்கழகம் |
பணி | தொழிலதிபர் |
பணியகம் | டிவிஎஸ் மோட்டார் |
பட்டம் | தலைவர் |
வாழ்க்கைத் துணை | மல்லிகா சீனிவாசன் |
பிள்ளைகள் | லட்சுமி, சுதர்ஷன் |
உறவினர்கள் | டி.வி.சுந்தரம் ஐயங்கார் (பாட்டனார்) |
கல்வி
தொகுஇவரது பாட்டனார் தி. வே. சுந்தரம் அய்யங்கார். தந்தை பெயர் டி. எஸ். சீனிவாசன்.இவரின் பள்ளிப் படிப்பு சென்னை டான் பாஸ்கோ ஆங்கிலப் பள்ளியில். கல்லூரி படிப்பு லயோலா கல்லூரி, கிண்டி பொறியியல் கல்லூரி, அமெரிக்காவின் புர்ஷ்யூ பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.எம். (Master of science and Management) பட்டம்
விருதுகள்
தொகுஜப்பானின் பெருமைமிகு 'டெமிங்' விருதை, சுந்தரம் கிளேட்டன் நிறுவனம் வென்றது. இவ்விருதை வென்ற முதல் நிறுவனம் இது. சிறந்த வர்த்தகச் செயல்பாடுகளுக்கான விருது, வளர்ந்துவரும் பெரிய தொழில் நிறுவனத்துக்கான விருது, மிகச்சிறந்த நிறுவனத்துக்கான விருது. போன்றவை டி.வி.எஸ். நிறுவனம் பெற்ற விருதுகள்.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ Idol-theft case: TVS Motor chairman Venu Srinivasan gets temporary relief
- ↑ Idol missing case: TVS Motor chairman Venu Srinivasan seeks advance bail
- ↑ Madras High Court grants bail to Venu srinivasan
- ↑ "Anand Mahindra, Venu Srinivasan to be honoured with Padma Bhushan; Naukri.com founder to get Padma Shri". தி எகனாமிக் டைம்ஸ். 26 January 2020. பார்க்கப்பட்ட நாள் 26 January 2020.
- ↑ "MINISTRY OF HOME AFFAIRS" (PDF). padmaawards.gov.in. பார்க்கப்பட்ட நாள் 25 January 2020.
- ↑ தினமணி தீபாவளி மலர்,1999,தலைசிறந்த தமிழர்கள். பக்கம்32