மழலையர் ஊட்டச்சத்துத் திட்டம்

மழலையர் ஊட்டச்சத்துத் திட்டம் (Balwadi Nutrition Programme) என்பது கிராமப்புறங்களில் 3 முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மழலையருக்கான ஊட்டச்சத்து உணவு வழங்குவதற்காக இந்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு சுகாதார மற்றும் கல்வித் திட்டமாகும்.[1][2][3]

இந்தத் திட்டம் 1970 ஆம் ஆண்டில் இந்திய அரசின் சமூக நலத் துறையின் கீழ் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த இந்தியக் குழந்தைகள் நல குழுமம் உட்பட நான்கு தேசிய அளவிலான அமைப்புகளுக்கு மானியங்கள் வழங்கப்படுகின்றன. இந்த உணவு ஒரு நாளைக்கு ஒரு குழந்தைக்கு 300 கிலோகலோரி ஆற்றலையும் 10 கிராம் புரதத்தையும் வழங்குகிறது.ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் திட்டம் செயல்படுத்தப்பட்டதால் மழலையர் ஊட்டச்சத்துத் திட்டம் படிப்படியாக விலக்கிக்கொள்ளப்பட்டு விட்டது. [சான்று தேவை]

மேற்கோள்கள்

தொகு
  1. "Balwadi Nutrition Programme". National Institute of Health and Family Welfare. Archived from the original on 2013-07-07. பார்க்கப்பட்ட நாள் 20 November 2012.
  2. "Important programmes to combat malnutrition in India". Food and Agricultural Organisation. பார்க்கப்பட்ட நாள் 20 November 2012.
  3. "Food supplement and calories motivation programme". Nutrition.gov. பார்க்கப்பட்ட நாள் 29 January 2013.