மழைச் சடங்கு

மழைச் சடங்கு என்பது வளமைச் சடங்குகளில் ஒன்றாகும்.[1] மழையின்றிப் பஞ்சம் ஏற்படும் காலங்களில் மழை பொழிய வேண்டி நாட்டுப்புற மக்களால் பல்வேறு சடங்குகள் நடத்தப்படுகின்றன.

வேளாண் தொழில் செய்பவர்கள் மழையை நம்பியே இருக்கின்றனர். மழை பருவத்தில் பெய்யாமல் பொய்க்கும் காலத்தில் வறுமை உண்டாகிறது. அதனால் மக்கள் ஒன்றாக இணைந்து சடங்குகள் செய்து மழை வேண்டுகின்றனர்.

சடங்குகள்

தொகு

பெண்களை மையமாகக்கொண்ட சடங்குகள்

தொகு

மழை வேண்டி செய்யப்படும் சடங்குகளில் பெண்கள் செய்கின்ற சடங்குகள் பல உள்ளன.

  • பெண்கள் நிர்வாண பூசை செய்தல் [2]
  • நிலத்தில் ஏர் உழுவ மாடுகளுக்கு பதிலாக பெண்களை கட்டி உழுதல். [3][4]

திருமணம் செய்வித்தல் சடங்குகள்

தொகு

மழை வேண்டி இரு விலங்குகளுக்கு திருமணம் செய்து வைக்கும் சடங்கு கடைபிடிக்கப்படுகிறது. சில இடங்களில் மனிதருக்கும் விலங்குகளுக்கும் திருமணம் செய்து வைக்கின்றனர்.

மழை பெய்ய வேண்டி கோவிலில் உள்ள அரசமரத்துக்கும், வேப்பமரத்துக்கும் திருமணம் செய்து வழிபாடு நடத்தப்படுகிறது. அரசமரத்தை சிவபெருமான் வடிவிலும், வேப்பமரத்தை பார்வதி தேவி வடிவிலும் நினைத்து திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்பதும், நோய் நொடி இல்லாமல் மக்கள் நலமாக வாழ்வார்கள் என்பதும் நம்பிக்கையாகும்.[5]

  • கழுதைக்குத் திருமணம் செய்து வைத்தல் [2]
  • தவளைகளுக்குத் திருமணம் செய்து வைப்பது [6]
  • குரங்குகளுக்குத் திருமணம் செய்து வைப்பது [6]

திருமணம் மட்டுமின்றி வேறுசில சடங்குகளும் உயிரினங்களை வைத்து செய்யப்படுகின்றன.

  • தவளையை நீரில் விடும் சடங்கு [7]

மழைக்கடவுள் வழிபாடு

தொகு
  • மழைக் கடவுளை போற்றிக் கொண்டே பாட்டு பாடி ஊர்வலமாகச் செல்வது [6]
  • வருண (பகவான்) யாகம் செய்தல்
  • கொடும்பாவி கட்டி இழுத்தல் [2]

மழைச்சோறு வழிபாடு

தொகு

மழைச்சோறு வழிபாடு என்பது மழை வேண்டி நடத்தப்படும் நாட்டார் சடங்குகளில் ஒன்றாகும். [8]இந்த சடங்கு முறைகளால் மழை வரும் என்பது மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.[9]

மழைக் கஞ்சி எடுத்தல்

தொகு

மழைக்கஞ்சி எடுத்தல் என்ற சடங்கில் சிறுமிகள் வீடுவீடாக சென்று தானியங்களை பெறுகின்றனர். அவற்றைக் கொண்டு பெண்கள் கஞ்சி தயாரிக்கின்றனர். அனைவரும் ஒன்றாக கஞ்சியை அருந்தி சடங்கினை முடிக்கின்றனர்.

வருண ஜெபம்

தொகு

கடும் வறட்சி நிலை ஏற்பட்டால் அணைகள், ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் வறண்டு போயிவிடுகின்றன. இந்த நிலை மாறி நல்ல மழை பெய்து அணைகள் உள்பட அனைத்து நீர்நிலைகளிம் தண்ணீர் நிரம்ப வேண்டி வருண ஜெபம் செய்யப்படுகிறது. மழைக்கான தெய்வமான வருண பகவானிடம் மழை வேண்டி இந்த ஜெபம் மேற்கொள்ளப்படுகிறது.

வருண யாகம்

தொகு

ஆதாரங்கள்

தொகு
  1. https://www.hindutamil.in/amp/news/tamilnadu/83212-.html
  2. 2.0 2.1 2.2 https://www.tamilvu.org/courses/diploma/a081/a0814/html/a0814114.htm
  3. பெண்கள் துன்பம் அடைவதை கண்டு மழைதெய்வம் மனமிறங்கும் என்பது நம்பிக்கை.
  4. https://www.vikatan.com/spiritual/156600-tamil-traditional-rituals-for-rain
  5. https://www.maalaimalar.com/amp/news/state/married-to-trees-for-rain-478485
  6. 6.0 6.1 6.2 "மழை வர வைக்க சிறுமிகள் நிர்வாணமாக ஊர்வலம் - ம.பி கிராமத்தில் அதிர்ச்சி சடங்கு". BBC News தமிழ். 7 செப்., 2021. {{cite web}}: Check date values in: |date= (help)
  7. https://www.vikatan.com/spiritual/156600-tamil-traditional-rituals-for-rain
  8. "மழை வேண்டி மழைச்சோறு எடுக்கும் வினோத வழிபாடு". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2022-07-06.
  9. "மழைச்சோறு சேகரித்து வழிபாடு வறட்சியை விரட்ட நூதனம்". Dinamalar. 2013-04-02. பார்க்கப்பட்ட நாள் 2022-07-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மழைச்_சடங்கு&oldid=3711848" இலிருந்து மீள்விக்கப்பட்டது