நீலகண்ட தாரணி

புத்த மந்திரம்
(மஹா கருணா தாரணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நீலகண்ட தாரணி அல்லது மஹா கருணா தாரணி எனபது அவலோகிதேஷ்வரருக்கு உரிய ஒரு மகாயான பௌத்த தாரணி ஆகும். இதை மாண்டரீன் சீன மொழியின் டாபேய் ஸோ(Dàbēi Zhòu) என அழைப்பர். மஹாகருணாசித்த சூத்திரத்தின் படி இந்த தாரணியை அவலோகிதேஷ்வரர் புத்தர்கள், போதிசத்துவர்கள், தேவர்கள் ஆகியோர் அடங்கிய சபையின் முன் கூறப்பட்டதாகும். இது ஓம் மணி பத்மே ஹூம் என்ற ஆறெழுத்து மந்திரத்தைப் போல கிழக்காசியாவில் மிகவும் புகழ்பெற்ற தாரணி ஆகும். இந்த தாரணி பாதுகாப்புக்க்காகவும், தூய்மைபடுத்துவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

தோற்றம்

தொகு

இந்த நீலகண்ட தாரணி கி.பி ஏழாம் நூற்றாண்டுக்கும் எட்டாம் நூற்றாண்டுக்கும் இடையின் மூவரால் சீனத்துக்கும் மொழிப்பெயர்க்கப்பட்டது. முதலில் சீ-டுங்'ம்(627-649) அடுத்து பாகவததர்மரும் (650-660) , இதற்கடுத்து போதிருசியும் ( 709 ) இதனை சீனத்துக்கு மொழிப்பெயர்த்தனர். பின்னர் வஜ்ரபோதியும்(719-741), இருமுறை அவரது சீடர் அமோவஜ்ரரும்(723-774) மொழிப்பெயர்த்தனர். 15ஆம் நூற்றாண்டில் தியானபத்திரரும் ஒரு முறை இதை மொழிப்பெயர்த்துள்ளார்.

இத்தனை பதிப்புகள் இருந்தாலும், அமோகவஜ்ரரின் பதிப்பே பரவலாக பயன்பாட்டில் உள்ளது. சீ-டுங்'இன் பதிப்பு ஆதி மூல வடிவாக இருந்தாலும் அது மிகவும் நீளமாகவும் உச்சரிப்பதற்கு கடினமாக இருந்த காரணத்தினால் அமோகவஜ்ரரரின் பதிப்பு பெருவாரியான பயன்பாட்டில் உள்ளது.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலகண்ட_தாரணி&oldid=3682518" இலிருந்து மீள்விக்கப்பட்டது