கோலம் என்றால் "அழகு"என்று பொருள்.அரிசி மாவினால் கோலம் போடுவதால் எறும்பு மற்றும் பூச்சிகளுக்கு உணவாக பயன்படும் என்பதால் காலையில் வாசலில் கோலம் போட்டால் மகாலட்சுமி வீட்டிற்கு வருவாள், வாசம் செய்வாள் என்று நம்பப்படுகிறது. இதனை வடமொழியில் ரங்கோலி என்பர். ரங்கம்=மண்டபம் அல்லது சபை என்று பொருள் . வல்லி என்றால் கொடி. கொடி போன்று புள்ளிகளாலும் , கோடுகளாலும் அழகாகப் போடப்பட்டதால் ரங்கோலி என அழைக்கப்படுகிறது.[1] காலையில் வாயு மண்டலதில் வரும் தூய காற்று பெண்களின் உடல் நலத்திற்கு நன்மை பயக்கும் என்பதால் அதிகாலையில் மாக்கோலம் வாசலில் இடுவது வழக்கமாக இருந்து வருகிறது.[சான்று தேவை]

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாக்கோலம்&oldid=3644962" இலிருந்து மீள்விக்கப்பட்டது