மாங்கா இஞ்சி

மாங்காவிஞ்சி
Curcuma amada
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Commelinids
வரிசை:
இஞ்சி-மஞ்சள் வகுப்பு
சிங்கிபெராலேசு
(Zingiberales)
குடும்பம்:
இஞ்சி-மஞ்சள் குடும்பம்
சிங்கிபெராசியே
(Zingiberaceae)
பேரினம்:
மாங்காவிஞ்சி
(குர்க்குமா
(Curcuma)
இனம்:
குர்க்குமா அமாடா,
C. amada
இருசொற் பெயரீடு
Curcuma amada
(குர்க்குமா அமாடா)

இராக்ஃசுபர்கு (Roxburgh)
வேறு பெயர்கள்

குர்க்குமா மாங்கா,
Curcuma mangga
Valeton & van Zijp

மஞ்சள் இஞ்சி அல்லது குர்க்குமா அமாடா (Curcuma amada) என்பது இஞ்சிக் குடும்பத்தைச் சேர்ந்த, மஞ்சள் இனத்துக்கு நெருக்கமான ஒரு தாவரம். இஞ்சிக்குடும்பத்தை சிஞ்சிபெராசியே (Zingiberaceae) என உயிரியலில் குறிப்பிடுகின்றனர். இத்தாவரத்தின் கிழங்கு இஞ்சிபோலவே தோற்றமளிக்கின்றது ஆனால் மாங்காயைப்போன்ற சுவை கொண்டிருக்கின்றது[1]. ஆங்கிலத்திலும் இத்தாவரத்தின் மாற்றுப்பெயராக உள்ள பெயரில் mangga என்னும் பெயர் உள்ளது. தென்னிந்தியாவில் இதை ஊறுகாய் செய்வதற்குப் பயன்படுத்துகின்றனர். உயிரியல் வகைப்பாட்டில் இந்த இனத்தின் பெயரில் சிறு குழப்பம் இருக்கின்றது. சில செடியியலாளர்கள் C. mangga (குர்க்குமா மாங்கா) என்னும் பெயர் தென்னிந்தியாவில் காணப்படும் அதே C. mangga (குர்க்குமா மாங்கா) என்றும் இன்னும் சிலர் இது கிழக்கு இந்தியாவில் காணப்படும் குர்க்குமா அமாடா (C. amada) வகை என்றும் கருதுகின்றனர்.[2]

மாங்கா இஞ்சி எனப்படும் குர்க்குமா மாங்காவிலிருந்து பிரித்தெடுக்கப்படுவதில் மாந்தர்களுக்கு ஏற்படும் சிலவகையான புற்றுநோய் உயிரணுக்களை அழிக்கும் உயிரணுநச்சுத்தன்மை (cytotoxic) இருப்பதாகக் கண்டுபிடித்துள்ளனர். MCF-7 என்று அழைக்கப்படும் இயக்குநீர் சார்ந்த முலை உயிரணு வரிசையில் வரும் புற்றுநோயணுக்களையும், KB எனப்படும் குரல்வளை-மூச்சுக்குழல் பகுதிய புற்றுநோய் உயிரணு வரிசையில் வரும் புற்றுநோயணுக்களையும் (a nasopharyngeal epidermoid cell line), A549 (நுரையீரல் உயிரணு வரிசை, a lung cell line) Ca Ski (கருப்பைக்குழாய் உயிரணு வரிசை, a cervical cell line), HT-29 என்னும் பெருங்குடல் உயிரணு வரிசையில் வரும் புற்றுநோயணுக்களையும் (a colon cell line) அழிக்கவலல் உயிரணுநச்சுத்தன்மையை மாங்கா இஞ்சி கொண்டிருப்பதை நிறுவியிருக்கின்றார்கள். அதே நேரம் புற்றுநோயற்ற MRC-5 என்னும் ஃபைபரோபிளாசிட்டு உயிரணு வரிசையின் அணுக்களுக்கு (திசுக்களின் புறக்கட்டுமான தசைநார்ப்புரதம் போன்றவற்றைச்செய்வன) எந்தவிதமான நச்சுத்தன்மையும் காட்டவில்லை[3].

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும் தொகு

  1. Alapati Srinivasa Rao, Bandaru Rajanikanth, Ramachandran Seshadri (1989). "Volatile aroma components of Curcuma amada Roxb". J. Agric. Food Chem. 37 (3): 740–743. doi:10.1021/jf00087a036. 
  2. Leong-Škorničková (2010). "Stability of names in Indian Curcuma". Taxon 59 (1): 269–282. http://ibot.sav.sk/usr/Karol/docs/PDF_files/curcuma_taxon2010.pdf. 
  3. Malek SN, Lee GS, Hong SL, Yaacob H, Wahab NA, Faizal Weber JF, Shah SA"Phytochemical and cytotoxic investigations of Curcuma mangga rhizomes." Molecules. 2011;16(6):4539-48
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாங்கா_இஞ்சி&oldid=2201432" இலிருந்து மீள்விக்கப்பட்டது