மாசாய் இனக்குழு
மாசாய் இனக்குழு, கெனியாவிலும், வடக்கு தான்சானியாவிலும் வாழுகின்ற அரை-நாடோடித் தொல்குடி ஆகும். இவர்களுடைய தனித்துவமான வழக்கங்களும், உடைகளும், பெரும்பாலான வேட்டைக் காடுகளுக்கு அருகில் வாழ்வதும், இவர்களை உலகில் அதிகமாக அறியப்பட்ட இனக்குழுக்களில் ஒன்றாக ஆக்கியுள்ளன.[3] இவ்வினக்குழுவினர், நிலோ-சகார மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மா என்னும் மொழியைப் பேசுகின்றனர்.[3] இவர்களிற் பலர் கெனியா, தான்சானியா ஆகிய நாடுகளின் அலுவலக மொழிகளான சுவாஹிலி, ஆங்கிலம் ஆகிய மொழிகளையும் கற்கிறார்கள்.
மாசாய்ப் பெண்களினதும், சிறுவர்களினதும் ஒரு கூட்டம் (2006). | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
883,000 | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
கென்யா (மதிப்பீடுகள் வேறுபடுகின்றன.) | 377,089 அல்லது 453,000[1] [2] |
தன்சானியா (வடக்கு) | 430,000 |
[2] | |
மொழி(கள்) | |
மா (ɔl Maa) | |
சமயங்கள் | |
கிறிஸ்தவம் உட்பட்ட ஒருகடவுட் கோட்பாடு | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
சாம்புரு |
1994 ஆண்டுக்கான மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி கெனியாவில் 453,000[2] மசாய்களும், 1993 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி தான்சானியாவில் 430,000 மசாய்களுமாக ஏறத்தாழ 900,000 மசாய்கள் வாழுகின்றனர்.[3] அவர்கள் அணுகுவதற்குக் கடினமான பகுதிகளில் வாழ்வதாலும், அவர்களுடைய அரை-நாடோடித் தன்மையாலும் இவர்களைக் கணக்கெடுப்பது சிக்கலாக உள்ளது. கெனியா, தான்சானியா அரசுகள், மசாய்கள் தமது அரை-நாடோடி வாழ்க்கை முறையைக் கைவிடுவதற்கான திட்டங்களைச் செயல்படுத்துகின்ற போதிலும், இவர்கள் தமது பழைய வாழ்க்கை முறையைப் பின்பற்றவே விரும்புகிறார்கள்.
குறிப்புகள்
தொகு- ↑ 2009 Population & Housing Census Results
- ↑ 2.0 2.1 2.2 Ethnologue report for language code:mas ethnologue.com, '453,000 in Kenya (1994 I. Larsen BTL) ... 430,000 in Tanzania (1993)', Gordon, Raymond G., Jr. (ed.), 2005. Ethnologue: Languages of the World, Fifteenth edition. Dallas, Tex.: SIL International
- ↑ 3.0 3.1 3.2 Maasai - Introduction Jens Fincke, 2000-2003