மாசிடோனியோ மெலோனி
மாசிடோனியோ மெலோனி (Macedonio Melloni, 11 ஏப்ரல் 1798 – 11 ஆகஸ்ட் 1854) ஓர் இத்தாலிய இயற்பியலாளர். அகச்சிவப்புக் கதிர்வீச்சு அல்லது வெப்பக் கதிர்வீச்சு பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டவர்.[1] வெப்ப மின்னிரட்டையின் அமைப்பின் வடிவத்தை மாற்றி அமைத்தவர். பாறை உப்பைப் பயன்படுத்தி வில்லைகளை உருவாக்கியவர். இதன் மூலம் கண்ணுறு ஒளி போல வெப்பக் கதிர்களையும் குவிக்கவும் பிரதிபலிக்கவும் இயலும் என்பதை மெய்ப்பித்தார்.
மாசிடோனியோ மெலோனி | |
---|---|
பிறப்பு | ஏப்ரல் 11, 1798 பார்மா |
இறப்பு | ஆகஸ்ட் 11, 1854 போர்ட்டிசி |
தேசியம் | இத்தாலியர் |
துறை | இயற்பியல் |
அறியப்படுவது | வெப்பக் கதிர்வீச்சு |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Melloni, Macedonio". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.