மாணவர் மன்றம்

மாணவர் மன்றம் (Student council) (மாணவர் சங்கம், மாணவர் அமைப்பு என்றும் அழைக்கப்படுகிறது) என்பது தொடக்கப் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்கள் உட்பட பல்வேறு கல்வி நிறுவனங்களில் உள்ள மாணவர்களின் நிர்வாக அமைப்பாகும்.[1][2] பல்வேறு நாடுகளில் உள்ள பெரும்பாலான பொது மற்றும் தனியார் பள்ளி அமைப்புகளில் இந்த மன்றங்கள் உள்ளன.[3][4][5] பல பொது மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள், மாணவர் அமைப்புகளின் உச்ச அமைப்பாக மாணவர் பேரவையைக் கொண்டுள்ளன.[6][7] ஜனநாயகம் மற்றும் கல்வியில் (1917) ஜான் டூயியின் கூற்றுப்படி, மக்களாட்சி மற்றும் தலைமைத்துவம் பற்றி மாணவர்கள் கற்றுக்கொள்வதில் மாணவர் மன்றங்கள் பெரும்பாலும் உதவுகின்றன.

மாணவர் மன்ற உறுப்பினர்கள்

செயல்பாடு

தொகு

மாணவர் மன்றம், ஆசிரியர்கள் மற்றும் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரிகளுடன் தங்களது கருத்துக்கள், ஆர்வங்கள் மற்றும் கவலைகளைப் பகிர்ந்து கொள்ள உதவுகிறது. சமூக நிகழ்வுகள், சமூகத் திட்டங்கள், தேவைப்படும் மக்களுக்கு உதவுதல் மற்றும் பள்ளிச் சீர்திருத்தம் உள்ளிட்ட பள்ளி அளவிலான செயல்பாடுகளுக்கு நிதி திரட்டவும் இது உதவுகிறது.[8][9]

பிராந்திய மற்றும் தேசிய கட்டமைப்புகள்

தொகு

அமெரிக்காவில் தேசிய மாணவர் மன்றங்களில் சேர்வது போல், மாணவர் மன்றங்கள் பெரிய அளவிலான மன்றங்களில் சேர வாய்ப்புள்ளது. கனடாவில், கனேடிய மாணவர் தலைமைத்துவ சங்கம் தேசிய காட்சியை ஒருங்கிணைக்கிறது,[10] மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் ஈடுபாட்டாளர் (இன்வால்வர்) எனப்படும் ஒரு அமைப்பு நாட்டின் மாணவர் மன்றங்களுக்கு பயிற்சி, ஆதரவு மற்றும் ஒருங்கிணைப்பை வழங்குகிறது [11]

பல்கேரியா

தொகு

பல்கேரியாவில், பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் மாணவர் மன்றத்தைக் கொண்டுள்ளன, அவை சட்டம் மற்றும் ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின் விதிமுறைகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன.

கனடா

தொகு

கனடாவில், மாணவர் மன்றமானது பள்ளிக்கு சிறப்பு நிகழ்வுகளுக்கு உதவுவதற்கும் பிற நிகழ்வுகளைத் திட்டமிடுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. கனடாவில் உள்ள மாணவர் மன்றங்கள் கல்விக் கட்டணம் போன்ற மாணவர் பிரச்சினைகளுக்கு வாதிடும் அமைப்பாக செயல்படுகின்றன.

இந்தியா

தொகு

இந்தியாவில், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் மன்றம் அரிதாகவே உள்ளது. இருந்தபோதிலும்,பல இடைநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.[12] இவை பொதுவாகப் பல்கலைக்கழகங்களில் உருவாக்கப்ப்ட்டுள்ளன.[13][14]

இந்தியாவில் மாணவர் மன்றங்கள் நேர்காணலுக்குப் பிறகு (அல்லது எழுத்துத் தேர்வு அல்லது இரண்டும்) தேர்ந்தெடுக்கவோ அல்லது பரிந்திரைக்கப்படலாம்.[12][15] பல்கலைக் கழகங்களில்,வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.[14][16][17]

சான்றுகள்

தொகு
  1. Bloomdahl, Susana Contreras; Navan, Joy (2013). "Student Leadership in a Residential College: From Dysfunction to Effective Collaboration" (in en). Journal of College Student Development 54 (1): 110–114. doi:10.1353/csd.2013.0005. http://muse.jhu.edu/content/crossref/journals/journal_of_college_student_development/v054/54.1.bloomdahl.html. 
  2. Olguín-Orellana, Gabriel J.; Papadimitriou, Sofia; Langtry Yáñez, Alberto; Eranti, Pradeep; Flores-Vallejo, Rosario Del Carmen; Castillo-Orozco, Ana I.; Mayoral-Peña, Kalaumari; Parra, R. Gonzalo (2021). "6th European Student Council Symposium (ESCS): overcoming obstacles to enhance virtuality, connectivity, inclusivity and community engagement". F1000Research 10: ISCB Comm J–41. doi:10.12688/f1000research.40666.1. பப்மெட்:33537121. 
  3. Goodrich, Andrew (2018). "Peer Mentoring and Peer Tutoring Among K–12 Students: A Literature Review" (in en). Update: Applications of Research in Music Education 36 (2): 13–21. doi:10.1177/8755123317708765. http://journals.sagepub.com/doi/10.1177/8755123317708765. 
  4. Wekesa, Ferdinand Chemwende; Mbogo, Rosemary Wahu (2021). "Effect of Leadership Roles on Academic Performance: A Reflection on Student Council Officials in Public Secondary Schools in Kenya." (in en). Edition Consortium Journal of Educational Management and Leadership 2 (1): 121–128. doi:10.51317/ecjeml.v2i1.247. https://editoncpublishing.org/ecpj/index.php/ecjeml/article/view/247. 
  5. Perry-Hazan, Lotem (2021). "Students' Perceptions of Their Rights in School: A Systematic Review of the International Literature" (in en). Review of Educational Research 91 (6): 919–957. doi:10.3102/00346543211031642. http://journals.sagepub.com/doi/10.3102/00346543211031642. 
  6. Cuypers, Wim L.; Dönertaş, Handan Melike; Grewal, Jasleen K.; Fatima, Nazeefa; Donnelly, Chase; Mer, Arvind Singh; Krieger, Spencer; Cuypers, Bart et al. (2021). "Highlights from the 16th International Society for Computational Biology Student Council Symposium 2020". F1000Research 10: ISCB Comm J–443. doi:10.12688/f1000research.53408.1. பப்மெட்:34136128. 
  7. O’Sullivan, Kathy (2017), Leal Filho, Walter; Brandli, Luciana; Castro, Paula; Newman, Julie (eds.), "Student Leadership in Sustainable Development in a Private University in the UAE—A Case Study", Handbook of Theory and Practice of Sustainable Development in Higher Education, World Sustainability Series, Cham: Springer International Publishing, pp. 201–216, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-3-319-47868-5_13, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-319-47867-8, பார்க்கப்பட்ட நாள் 2021-11-08
  8. "Student Council" பரணிடப்பட்டது 2007-12-11 at the வந்தவழி இயந்திரம், Mills Lawn School. Retrieved 11/29/07.
  9. Fletcher, A. (2005) Meaningful Student Involvement. பரணிடப்பட்டது 2015-01-16 at the வந்தவழி இயந்திரம் SoundOut. Retrieved 11/29/07.
  10. CSLA. Retrieved 11/29/07.
  11. involver. Retrieved 11/29/07.
  12. 12.0 12.1 "New student council takes up the mantle". Telangana Today (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-05-06. பார்க்கப்பட்ட நாள் 2021-11-08.
  13. "PU: No clarity on this year's student elections yet". Hindustan Times (in ஆங்கிலம்). 2021-09-12. பார்க்கப்பட்ட நாள் 2021-11-08.
  14. 14.0 14.1 Mani, Rajiv (2019-05-18). "Student council to replace student union elections at Allahabad University". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-08.
  15. "In a first, students' council elected virtually". Telangana Today (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-04-29. பார்க்கப்பட்ட நாள் 2021-11-08.
  16. "Panjab University students demand elections, authorities silent". The Times of India (in ஆங்கிலம்). 2021-07-09. பார்க்கப்பட்ட நாள் 2021-11-08.
  17. "DUSU elections unlikely this year due to COVID-19, office-bearers to get extended term". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2021-11-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாணவர்_மன்றம்&oldid=3958757" இலிருந்து மீள்விக்கப்பட்டது