மாணிக்க ஊசித்தட்டான்

பூச்சி இனம்
மாணிக்க ஊசித்தட்டான்
Platycypha fitzsimonsi
ஆண் வடிவம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
பி. பிட்சிமோன்சி
இருசொற் பெயரீடு
பிளாட்டிசைப்பா பிட்சிமோன்சி
பிங்கே, 1950

மாணிக்க ஊசித்தட்டான் (பிளாட்டிசைப்பா பிட்சிமோன்சி), அல்லது பிட்சிமோனின் நகை குளோரோசைப்பிடே குடும்ப ஊசித்தட்டான்களின் ஓரினமாகும். இது தென் ஆப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்ட இனமாகும். இது வாழிடம் மர்ங்களாலும் காடுகலாலும் சூழ்ந்த ஓடைகளும் ஆறுகளும் ஆகும்.[2] இது மிகச் சிறிய இனமாகும்; சிறகின் நீளம் 29 முதல் 34 மிமீ வரையும் சிறகு அகலம் 46 முதல் 54மிமீ வரையும் அமையும். முதிர்ந்த ஆண்தட்டானின் கழுத்து குரும்பட்டையுள்ள மஞ்சட்சிவப்பு முதல் சிவப்பு நிறமாகத் திகழும். வயிறு தெளிந்த சிவப்பு, கருப்பு, நீலமாக அமையும். பெண்களும் இளவுயிரிகளும் dark அடர்பழுப்பு முதல் காக்கி நிறத்தில் இருக்கும்.[2]


ஊசித்தட்டான்களின் அறிவியல் பெயரான "Zygopetera" என்பது கிரேக்க மொழி சொல்லாகும். zygo என்றால் ஒன்றிணைந்த என்றும் petera என்றால் சிறகு என்றும் பொருள். இந்த பெயருக்கு ஏற்ப இவற்றின் சிறகுகள் இணைச் சிறகுகளே.உயர்ந்த மலைப்பகுதிகளில் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் இந்த வகை மாணிக்க ஊசித்தட்டான்களை அதிகம் காணமுடியும்.[3]

காட்சிமேடை

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Suhling, F. (2017). "Platycypha fitzsimonsi". IUCN Red List of Threatened Species 2017: e.T63208A75262122. doi:10.2305/IUCN.UK.2017-3.RLTS.T63208A75262122.en. https://www.iucnredlist.org/species/63208/75262122. பார்த்த நாள்: 11 November 2021. 
  2. 2.0 2.1 Tarboton, W.R.; Tarboton, M. (2005). A fieldguide to the damselflies of South Africa. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0620338784.
  3. பூச்சிகள் ஒரு அறிமுகம் - புத்தகம் பதிப்பகம்  : வானம் ஆசிரியர் : ஏ.சண்முகநாதன் வருடம் : சனவரி 2017 பக்கம் 85

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாணிக்க_ஊசித்தட்டான்&oldid=3739498" இலிருந்து மீள்விக்கப்பட்டது