மாதரி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மாதரி சிலப்பதிகாரக் கதைமாந்தருள் ஒருவராவார். பொருளிழந்த கோவலனையும் கண்ணகியையும் மதுரைக்குக் கூட்டி வரும் கவுந்தி அடிகள் அவர்களை இவள் வீட்டிலேயே தங்கவைக்கின்றார். மாதரியும் நன்கே விருந்தோம்பும் பண்பினள் ஆதலால் தன் மகள் ஐயையையே கண்ணகிக்குப் பணிப்பெண் ஆக்கின்றாள். பின்னர்க் கோவலன் கள்வன் எனப் பொய்சாட்டப்பட்டுக் கொலையுண்ட போது கண்ணகி துன்பப்படும் போது குரவைக்கூத்தாடி அவளை மகிழ்விக்க விழைகின்றாள். இறுதியில், விருந்தினராகிய கண்ணகி படும் துயர் ஆற்றமுடியாமை கண்டு தான் உயிர் துறக்கிறாள்.