மாதவ பெருமாள் கோயில்
தமிழ்நாட்டில் சென்னையில் மயிலாப்பூரில் அமைந்துள்ள மாதவ பெருமாள் கோயில்(Madhava Perumal temple) இந்து கடவுளான விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. திராவிட பாணியிலான கட்டிடக்கலையில் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது.இறைவன் மாதவ பெருமாள் மற்றும் அவரது துணைவியார் லட்சுமி அமிர்தவள்ளியாக காட்சியளிக்கிறார்.கி.பி ஆறிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள் பன்னிரு ஆழ்வார்கள்.அவர்களுள் முதலாழ்வார் என அழைக்கப்படுபவர் பேயாழ்வார்.பேயாழ்வாரின் பிறப்பிடமாக இக்கோவில் கருதப்படுகிறது. இந்த கோயில் காலை 7 மணி முதல் காலை 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்.இந்த கோயில் தமிழக அரசின் இந்து மத மற்றும் இந்துசமய அறநிலையத்துறையால் பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.
மாதவ பெருமாள் கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ் நாடு |
மாவட்டம்: | சென்னை |
அமைவு: | மயிலாப்பூர் |
ஆள்கூறுகள்: | 13°2′16″N 80°16′17″E / 13.03778°N 80.27139°E |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிட கட்டிடக்கலை |
புராணம்
தொகுபாற்கடலை கடைந்தபோது லட்சுமி தேவியை பிருகு முனிவரின் ஆசிரமத்திற்கு செல்லும்படி மகாவிஷ்ணு கூறினார்.பிருகு முனிவர் ஒரு பெண் குழந்தையை பெறுவதற்காக தவம் மேற்கொண்டார்.இந்த வேளையில் லெட்சுமியை தன் மகளாகப்பெறும் வாய்ப்பை பெற்றார்.அமிர்தவள்ளி எனும் பெயர்சூட்டி வளர்த்து வந்ததார்.மாதவ பெருமாள், பிருகு முனிவரின் மகள் அமிர்தவல்லி தெய்வத்தை மணந்ததாக நம்பப்படுகிறது, இதனால் கல்யாண பெருமாள் என்ற பெயரைப் பெற்றார். கி.பி 6 முதல் 9 ஆம் நூற்றாண்டின் வாழ்ந்த பன்னிரண்டு ஆழ்வார்களில் முதல் மூன்று பேரில் ஒருவரான பேயாழ்வாரின் பிறப்பிடமாக இந்த கோயில் நம்பப்படுகிறது. புகழ்பெற்ற ஆழ்வார்கோயில் வளாகத்திற்குள் உள்ள 60 அடி(18 மீ) மணிகிராவம் கிணற்றிலிருந்து பூமிக்கு வந்ததாக நம்பப்பட்டது[1].இன்றைய காலகட்டத்தில், இந்த கோயில் தமிழக அரசின் இந்து மத மற்றும் தொண்டு நிறுவனங்களால் பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.[2]
கோவில்
தொகுமாதவ பெருமாள் கோயில் திராவிட கட்டிடக்கலையில் கட்டப்பட்டுள்ளது மற்றும் இரண்டு நிலப்பரப்புகளைக் கொண்டது. இக்கோயில் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் புறநகர்ப் பகுதியான மைலாப்பூரில் அமைந்துள்ளது.இந்த கோவிலில் 10 அடி (3.0 மீ) உயரமான சுவர்களால் சூழப்பட்ட ஒரு செவ்வக திட்டம் உள்ளது.மேலும் 5 அடுக்கு கோபுரமும், நுழைவாயில் கோபுரத்தால் துளைக்கப்பட்டுள்ளது. கருவறைதெய்வத்தின் சிலை கிரானைட்டால் செய்யப்பட்ட ஒரு உருவமாகும்.இறைவனின் இருபுறமும் ஸ்ரீதேவி மற்றும் பூமிதேவியின் உருவங்களுடன் அமர்ந்திருக்கும் கோலத்தில் காணப்படுகிறது.மத்திய சன்னதிக்கு பின்னால் அமைந்துள்ள விஷ்ணுவின் அவதாரமான வராஹாமூர்த்திக்கு ஒரு சிறிய சன்னதி உள்ளது.மத்திய ஆலயத்திற்கு செல்ல நினைத்தால் ஒரு வழிபாட்டு மண்டபம் மற்றும் குறுகிய அர்த்த மண்டபம் வழியாக செல்லலாம்.கொடிமரம் கருட சன்னதிக்கு பின்னால் அமைந்துள்ளது.இருபுறமும் உள்ள வழிபாட்டு மண்டபத்தில் ஆழ்வார்கள் படங்கள் உள்ளன, அமிர்தவள்ளி சன்னதி கோயிலின் மேற்குப் பகுதியில் இரண்டாவது இடத்தில் அமைந்துள்ளது.
வழிபாட்டு நடைமுறைகள் மற்றும் பண்டிகைகள்
தொகுமாதவ பெருமாள் கோயில் காலை 7 மணி முதல் காலை 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் 8 மணிவரை திறந்திருக்கும். பூசாரிகள் திருவிழாக்காலங்களிலும் தினசரியும் பூஜைகள் செய்வார்கள்.தமிழ்நாட்டின் மற்ற விஷ்ணு கோயில்களில் உள்ள பூசாரிகளைப் போல பிராமண உட்பிரிவு சாதியினரான வைணவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான் இங்கும் இருக்கிறார்கள்.கோவில் சடங்குகள் ஒரு நாளைக்கு நான்கு முறை செய்யப்படுகின்றன: காலைச் சந்தி பூஜை காலை 8 மணிக்கும் , காலை 10:00 மணிக்கு உச்சிக்காலப் பூசையும் , மாலை 5:00 மணிக்கு சாயரட்சைப் பூசையும் மற்றும் அர்த்தசாமப் பூசை இரவு 7:00 மணிக்கு நடைபெறும்.ஒவ்வொரு சடங்கிற்கும் மூன்று படிகள் உள்ளன: குடமுடகூத்தன் மற்றும் அவரது துணைவியார் அமிர்தவள்ளி ஆகிய இருவருக்கும் அலங்கரம், நிவேதனம் (உணவுப் பிரசாதம்) மற்றும் தீபாராதனை நடைபெறும்.வழிபாட்டின் போது, வேதங்களில் உள்ள மத அறிவுறுத்தல்கள் பூசாரிகளால் பாராயணம் செய்யப்படுகின்றன.பக்தர்கள் கோவில் கொடிமரம் முன்னால் வணங்குகின்றனர். கோவிலில் வாராந்திர, மாதாந்திரம் பதினைந்து சடங்குகள் செய்யப்படுகின்றன. மாசிமாதத்தில் வரும் மாசிமகத் தினத்தின்போது,தெப்ப ஊர்ச்சவம் எடுக்கப்படுகிறது. இந்த விழா கோயிலின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். இறைவனை கோவிலில் இருக்கும் புனிதநீரால் அபிசேகம் செய்யப்படும்[3].இவ்வாறு மற்றநாட்களில் பேயாழ்வாருக்கும் புனிதநீரால் அபிசேகம் நடைபெறும்.இத்திருவிழா 10 ஆண்டுகளாக கொண்டாடப்படவில்லை,2011 ஆண்டிலிருந்து கொண்டாடப்படுகிறது.இத்திருவிழா நாட்களில் பேயாழ்வாருக்கும் திருவிழா எடுக்கப்படுகிறது.அச்சுப தினத்தில் கோவில் தொட்டியில் அணைத்து புண்ணியநதிகளும் ஒருங்கிணைவதாக நம்பப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும் இத்திருவிழாவான பிரம்மோற்சவம் தமிழ்மாதமான சித்திரை மாதத்தில் கொண்டாடப்படுகிறது[4].
மேற்கோள்கள்
தொகு- ↑ Lalithasai (27 February 2011). "Float festival at Madhava Perumal Temple". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-downtown/float-festival-at-madhava-perumal-temple/article1494084.ece. பார்த்த நாள்: 12 August 2015.
- ↑ "Thirukoil - Temple list of Tamil Nadu" (PDF). Hindu Religious & Charitable Endowments Department, Government of Tamil Nadu. p. 244. Archived from the original (PDF) on 2020-10-09. பார்க்கப்பட்ட நாள் 2020-12-28.
- ↑ "Thiruther at Madhava Perumal temple today". தி இந்து. 17 May 2015. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-downtown/thiruther-at-madhava-perumal-temple-today/article7214897.ece. பார்த்த நாள்: 12 August 2015.
- ↑ S. Muthiah, ed. (2008). Madras, Chennai: A 400-year Record of the First City of Modern India, Volume 1. Palaniappa Brothers. p. 112. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788183794688.