மாதவ மகாதிராயன்
மாதவ மகாதிராயன் கங்க வம்சத்தின் 2வது அரசராக அறியப்படுகிறார். இவரது ஆட்சிக்காலத்தை அறுதியிட்டுக் கூறும் சான்றுகள் ஏதும் கிடைக்கப் பெறவில்லை. இவர் கொங்கணி வர்மனின் மகன் என்கிறது கொங்கு தேச ராஜாக்கள் கையேட்டுப் பிரதி. [1]
ஸ்கந்தபுரம்
தொகுகொங்கு தேசத்தை ஆண்டதாகக் கூறியிருக்கும் கங்க வம்ச அரசர்கள் போலவே இவனும் ஸ்கந்தபுரத்தை தலைநகராகக் கொண்டு நீதி நெறி தவறாது ஆட்சி செய்தார் எனவும், பல தேச மன்னர்களை வென்று அவர்களிடமிருந்து கப்பம் பெற்று ஆட்சி செய்தார் எனவும், கல்வி, கேள்விகளில் தேர்ச்சி பெற்றும், தர்மம் என யார் வந்து கேட்டாலும் அவர்களுக்கு இல்லை என்று சொல்லாது தானம் செய்தான் எனவும், அநேக கவிஞர்களை தனது அரசவையில் வைத்து ஆதரித்து வந்தான் எனவும் அறியமுடிகிறது.[2]
சான்றாவணம்
தொகுஆதாரங்கள்
தொகு- Kongudesarajakkal , Government manuscript Library, Chennai