மாதா-உது  (Mata-Utu) என்பது வலிசும் புட்டூனாவும் பிரதேசத்தின் தலைநகரம் ஆகும். இது பிரான்சின் நிருவாகப் பிரிவுகளில் ஒன்றாகும். இது உவியா தீவினில் அமைந்துள்ள ஹஹெக் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 2003 ஆம் சனத்தொகைக் கணக்கெடுப்பிற்கு அமைவாக இந்நகரின் மொத்த மக்கள் சனத்தொகை 1,191 ஆகும். நாட்டில் அமைந்துள்ள இரு துறைமுகங்களில் இந்நகரில் ஒன்று அமைந்துள்ளது.[1] ஹிஹிஃபோ விமான நிலையமே இந்நகரினதும் நாட்டினதும் விமான நிலையம் ஆகும். இந்நகரிலிருந்து 5. 6 கிலோமீற்றர்கள் தொலைவில் ஹிஹிஃபோ விமானநிலையம் அமைந்துள்ளது.

மாதா-உது
Matāʻutu
Mata-utu in 1862
Mata-utu in 1862
Location of Mata-Utu
Location of Mata-Utu
நாடு பிரான்சு
Collectivity வலிசும் புட்டூனாவும்
தீவுவலிசு
Chiefdomஉவியா
Districtஹஹாக்
Capital ofவலிசும் புட்டூனாவும்
மக்கள்தொகை (2003)
 • மொத்தம்1,191

இங்குள்ள மிகவும் குறிப்பிடத்தக்க இடங்கள் மாதா-உது பெருங்கோவில் மற்றும் மாளிகை ஆகிவையாகும்.

புவியியல் தொகு

வலிசு தீவுகளின் மிகப்பெரிய நகர மையம் இந்நகரமேயாகும். வலிசு தீவுக்கூட்டத்தின் பெரும்பாலன பகுதிகளை இந்நகரம் உள்ளடக்கியுள்ளது. இந்நகரின் மொத்தப் பரப்பளவு 60 சதுரகிலோமீற்றர்கள் ஆகும். இந்நகரம் முருகைக் கற்பாறைகளினால் சூழப்பட்டுள்ளது. வலிசு தீவுகளின் நிருவாக தலைமையகமும் வர்த்தகத் தலைமையகமும் இந்நகரமேயாகும்.[2] இந்நகரம் பல சிறு தீவுகளையும் உள்ளடக்கியுள்ளது. அச்சிறு தீவுகளில் பல கப்பல்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன.[3][4]

காலநிலை தொகு

தட்பவெப்ப நிலைத் தகவல், MATA-UTU, WALLIS AND FUTUNA
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 30.3
(86.5)
30.4
(86.7)
30.3
(86.5)
30.3
(86.5)
29.7
(85.5)
29.4
(84.9)
28.9
(84)
29.1
(84.4)
29.3
(84.7)
29.5
(85.1)
29.9
(85.8)
30.3
(86.5)
29.78
(85.61)
தினசரி சராசரி °C (°F) 27.4
(81.3)
27.5
(81.5)
27.4
(81.3)
27.4
(81.3)
27.0
(80.6)
26.9
(80.4)
26.5
(79.7)
26.6
(79.9)
26.8
(80.2)
26.9
(80.4)
27.1
(80.8)
27.4
(81.3)
27.08
(80.74)
தாழ் சராசரி °C (°F) 24.4
(75.9)
24.5
(76.1)
24.5
(76.1)
24.4
(75.9)
24.3
(75.7)
24.4
(75.9)
24.0
(75.2)
24.1
(75.4)
24.2
(75.6)
24.2
(75.6)
24.3
(75.7)
24.4
(75.9)
24.31
(75.76)
பொழிவு mm (inches) 381.4
(15.016)
301.3
(11.862)
373.5
(14.705)
287.6
(11.323)
258.4
(10.173)
159.3
(6.272)
186.5
(7.343)
149.9
(5.902)
221.1
(8.705)
330.4
(13.008)
322.9
(12.713)
350.3
(13.791)
3,322.6
(130.811)
ஆதாரம்: Weatherbase[5]

பொருளாதாரம் தொகு

இங்கு அண்ணளவாக 7,000 ஆடுகளும் 25,000 பன்றிகளின் மக்களின் வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வளர்க்கப்படுகின்றன.

சேவைகள் தொகு

வலிசும் புட்டூனாவும் பிரதேசத்தின் மாவட்ட நீதிமன்றம் இந்நகரிலேயே அமைந்துள்ளது. [6] வலிசு எட் புடுனா எனும் வானிலியும் இங்கு ஒலிபரப்பப்பட்டு வருகின்றது. [7]

கலாசாரம் தொகு

தூய கன்னி மரியாவின் விண்ணேற்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகத்து 15 அன்று இங்குள்ள மக்களால் கொண்டாடப்படுகின்றது.[8] உவியன் மொழி, பொலினீசியன் மொழி, டொன்க்கன் மொழி ஆகியவையும் நிருவாக நடவடிக்கைகளுக்காகப் பிரெஞ்சு மொழியும் பயன்படுத்தப்படுகின்றது. இந்நகரில் பயன்படுத்தப்படும் நாணயம் சிஃப்பி ஃபிராக் (CFP franc) ஆகும்.

மேற்கோள்கள் தொகு

  1. Page, Kogan (1 October 2003). Asia and Pacific Review 2003/4: The Economic and Business Report. Kogan Page Publishers. பக். 271. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7494-4063-3. https://books.google.com/books?id=z1cpiEJMAi8C&pg=PA271. 
  2. South Pacific 4. Lonely Planet. 2009. பக். 616–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-74104-786-8. https://books.google.com/books?id=IfugqkV_udYC&pg=PA616. பார்த்த நாள்: 6 May 2013. 
  3. Cornell, Jimmy (13 July 2010). World Cruising Destinations: An Inspirational Guide to All Sailing Destinations. A&C Black. பக். 349. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4081-1401-8. https://books.google.com/books?id=kzkeF8Pp4rgC&pg=PA349. 
  4. Sailing directions for the Pacific Islands, volume III: the south-central groups. United States Defense Mapping Agency, Hydrographic Center. 1976. பக். 173. https://books.google.com/books?id=eXRHAQAAIAAJ. 
  5. http://www.weatherbase.com/weather/weather.php3?s=917530&cityname=Mata-Utu-Hahake-Wallis-and-Futuna
  6. Central Intelligence Agency (2010). The World Factbook 2010: (Cia's 2009 Edition). Potomac Books, Inc.. பக். 689. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-59797-541-4. https://books.google.com/books?id=m-9eSrZtYAAC&pg=PA689. 
  7. Taylor & Francis Group (2003). The Europa World Year Book 2003. Taylor & Francis Group. பக். 1723–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781857432275. https://books.google.com/books?id=XLvU9lroRuUC&pg=PA1723. பார்த்த நாள்: 5 May 2013. 
  8. Olton, Tina (19 February 2007). Always Another Horizon: A Journey Around the World. iUniverse. பக். 61. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-595-86325-9. https://books.google.com/books?id=upQisUm1YkoC&pg=PA61. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதா-உது&oldid=3777738" இலிருந்து மீள்விக்கப்பட்டது