மாதுரி சிங்

இந்திய அரசியல்வாதி

மாதுரி சிங் (Madhuri Singh) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1923 ஆம் ஆண்டு சனவரி மாதம் 13 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக 1980 மற்றும் 1984 ஆம் ஆண்டுகளில் பீகாரின் பூர்னியா தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] தி. பி. சிங் என்பவைர இவர் திருமணம் செய்து கொண்டார். மாதுரி சிங்கிற்கு 2 மகன்களும் 4 மகள்களும் உள்ளனர். சிங் தனது 66 ஆவது வயதில் 31 டிசம்பர் 1989 அன்று பாட்னாவில் இறந்தார்.[4]

மாதுரி சிங்
Madhuri Singh
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1980–1989
முன்னையவர்இலகன் லால் கபூர்
பின்னவர்தசுலீமுதீன்
தொகுதிபூர்ணியா மக்களவைத் தொகுதி, பீகார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1923-01-13)13 சனவரி 1923
விசுணுப்பூர் கிராமம், பூர்ணியா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு31 திசம்பர் 1989(1989-12-31) (அகவை 66)
பட்னா, பீகார், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்தி. பி. சிங்
பிள்ளைகள்2 மகன்கள் மற்றும் 4 மகள்கள்
மூலம்: [1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Partywise Comparison since 1977 Purnea Parliamentary Constituency". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 28 May 2016.
  2. Joginder Kumar Chopra (1 January 1993). Women in the Indian Parliament: A Critical Study of Their Role. Mittal Publications. pp. 179–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7099-513-5. பார்க்கப்பட்ட நாள் 28 May 2016.
  3. V. M. Bachal (1992). Peoples' mandate. V.M. Bachal. p. 208. பார்க்கப்பட்ட நாள் 29 May 2016.
  4. Parliamentary Debates: Official Report. Lok Sabha Secretariat. 12 March 1990. p. 19. பார்க்கப்பட்ட நாள் 28 January 2023.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதுரி_சிங்&oldid=3847966" இலிருந்து மீள்விக்கப்பட்டது