மாந்தர்களின் தோல் நிறம்

மாந்தர்களின் தோல் நிறம் (human skin color) அடர் பழுப்பு நிறத்திலிருந்து மிதமான இளஞ்சிவப்பு-வெள்ளை நிறங்கள் வரை பலவிதங்களில் உள்ளன. தோல் நிறங்களில் வேறுபாடு உள்ளதற்கான காரணம் இயற்கைத் தேர்வே. முக்கியமாக உயிர்வேதியியல் தாக்கங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தோலை ஊடுருவும் புற ஊதாக்கதிர்களை ஒழுங்கு முறைப்படுத்தவே தோலில் நிறமாற்றத்திற்கான பரிணாமம் நிகழ்ந்தது[1].

மனிதர்களின் தோலின் நிறமானது அந்நாட்டின் தட்பவெப்ப நிலையை பொறுத்தும் மாறுபடுகிறது. தோலின் நிறத்திலிருக்கும் பரந்த படவேறுபாட்டைக் காட்டும், தென்னாப்பிரிக்காவில் உள்ள விரிந்த குடும்பம் ஒன்றின் உறுப்பினர்கள்.

பல விதமான காரணிகளால் மனிதனுடைய தோல் நிறம் முடிவு செய்யப்பட்டாலும், முக்கிய காரணியாக இருப்பது மெலனின் எனும் நிறமியாகும்[2]. மெலனின் தோலின் உட்புறத்தில் இருக்கும் நிறமி அணுக்கள் (Melanocytes) எனப்படும் உயிரணுக்களில் உருவாகின்றன. மெலனினே கருமை தோல் நிறமுடையவர்களின் நிறத்தை முடிவு செய்கிறது. வெளிர் தோல் நிறமுடையவர்களின் நிறத்தை முக்கியமாக முடிவுசெய்வது அடித்தோலின் அடிப்புறத்தில் இருக்கும் நீல-வெள்ளை நிறமுடைய இணைப்புத் திசுவும், அடித்தோலின் நரம்புகளில் சுற்றி வரும் இரத்த சிவப்பணுக்களே.

மேற்கோள்கள்தொகு

  1. Muehlenbein, Michael (2010). Human Evolutionary Biology. Cambridge University Press. பக். 192–213. 
  2. "மெலனின்". Dennis O'Neil. பார்த்த நாள் நவம்பர் 26, 2013.