மானச சஞ்சர ரே
மானச சஞ்சர ரே என்று தொடங்கும் பாடல் பதினெட்டாவது நூற்றாண்டில் சதாசிவ பிரம்மேந்திரரால் சமசுகிருத மொழியில் இயற்றப்பட்ட ஒரு பிரபலமான கருநாடக இசை கீர்த்தனை ஆகும்.[1] [2] இது 28-வது மேளகர்த்தா ராகமாகிய ஹரிகாம்போஜியில் பிறந்த சியாமா ராகத்தில், ஆதி தாளத்துடன் பாடப்படுவது வழக்கம். ஹரிச்சந்திரா மலையாளத் திரைப்படத்தின் ஆத்மவித்யாலயமே பாடல் இந்தப் படைப்பைத் தழுவி எடுக்கப்பட்டது.
பாடல் வரிகள் மற்றும் பொருள்
தொகுபாடல் வரிகள் | பொருள் | |
---|---|---|
பல்லவி | மானஸ சஞ்சர ரே! பிரப்பணி மானஸ சஞ்சர ரே! |
மனமே, உன் தீர்த்தயாத்திரை பிரம்மத்தை நோக்கியே இருக்கட்டும்! |
அனுபல்லவி | மதசிகிபிஞ்சாலங்கிருதசிகுரே
மஹனீயகபோலவிஜிதமுகுரே |
ஆனந்தபரவசத்தால் ஆடும் மயில்களின் இறகுகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ள பரப்பிரம்மத்தின் ஜடாமுடியே உனது தியான லட்சியம் ஆகட்டும். கண்ணாடியைவிட பிரகாசமான அந்த (பரப்பிரம்மத்தின்) கன்னங்களில் இருக்கட்டும் உனது கவனம். |
சரணம் | ஸ்ரீ ரமணீகுச துர்க விஹாரே, சேவக ஜனமந்திரமந்தாரே பரமஹம்ஸமுக சந்திரசகோரே பரிபூரிதமுரளீரவதாரே |
மகாலட்சுமியின் மார்பகங்களான கோட்டைகளுக்குள்ளே வலம் வரும், பக்தர்களுக்கு எளிதில் அடையக்கூடியவீட்டுமுற்றத்தின் மந்தாரம் போல், பூரணசந்திரபிம்பத்தின் மீது செம்பகம் போல், அண்டமனைத்தையும் தனது புல்லாங்குழலிசை பிரவாகத்தால் நிரப்பும் பிரம்மத்தை நோக்கி அமையட்டும் உன் யாத்திரை. |
மேற்கோள்கள்
தொகு- ↑ மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா (1991). "சதாசிவ பிரம்மேந்திர கிருதிகள்" (இசை) (in சமசுகிருதம்).
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "சங்கீத சுதா" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-02.