மான்சா மூசா

மேற்கு ஆப்பிரிக்க அரசர்

மூசா I (c. 1280[சான்று தேவை] - c. 1337 ), அல்லது மான்சா மூசா (Mansa Musa), இஸ்லாமிய மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலி பேரரசின் மான்சா (அரசர்) ஆவார்.

மூசா 1324 இல் ஹஜ் யாத்திரைக்காக ஒரு பெரிய பரிவாரத்துடன் மக்காவிற்கு சென்றார். வழியில், அவர் கெய்ரோவில் நேரத்தை செலவிட்டார், அங்கு இவர் ஆடம்பரமாக பலருக்கு மதிப்புமிக்க பரிசுகளை வழங்கினார். இதனால் அங்கு ஒரு தசாப்தத்திற்கும் மேலாக தங்கத்தின் விலையானது குறிப்பிடத்தக்க விலைச்சரிவைக் கண்டது. இது இஸ்லாமிய உலகின் கவனத்தை ஈர்த்தது.

14 ஆம் நூற்றாண்டில் மாலி பேரரசின் ஆட்சியாளரான மான்சா மூசாவின் சித்தரிப்பு

மூசாவின் பரம்பரை மற்றும் அவர் அரியணை ஏறிய வரலாறு

தொகு
 
இப்னு கல்தூனின் நாளாகமத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பட்ட மாலி பேரரசின் அரசர்களின் மரபுவழி [1]

மூசாவின் தந்தைக்கு ஃபகா லேயே [2] என்று பெயரிடப்பட்டது, அவரது தாய்க்கு கங்கு என்று பெயரிடப்பட்டிருக்கலாம். [a] மாலி பேரரசின் முதல் மான்சாவான சுஞ்சாதாவின் சகோதரர் அபு பக்கரின் மகன் ஃபாகா லீ ஆவர்.[4] [b] மூசாவின் சகோதரர் சுலைமானின் ஆட்சிக் காலத்தில் மாலிக்குச் சென்ற இப்னு பதூதா, மூசாவின் தாத்தாவுக்கு சாரிக் ஜடா என்று பெயரிடப்பட்டதாகக் குறிப்பிட்டுகிறார். [6] சாரிக் ஜாதா என்பது உண்மையில் மூசாவின் பெரியப்பாவாக இருந்த சுஞ்சாதாவின் மற்றொரு பெயராக இருக்கலாம். [6] மூசா பிறந்த தேதி தெரியவில்லை, ஆனால் அவர் 1324 இல் ஒரு இளைஞனாகத் தோன்றினார்.[7]

மூசா ஒரு பக்தியுள்ள இஸ்லாமியர் ஆவார். அவர் மேற்கொண்ட ஹஜ் யாத்திரை அவரை வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு முழுவதும் பிரபலமடையச் செய்தது. மூசாவைப் பொறுத்தவரை, இஸ்லாம் "கிழக்கு மத்திய தரைக்கடலின் கலாச்சார உலகில் ஒரு நுழைவு" ஆகும்.[8] அவர் தனது பேரரசிற்குள் சமயத்தை வளர்க்க அதிக நேரம் செலவிட்டார்.

புகழ்

தொகு

மேற்கு ஆப்பிரிக்காவின் வரலாற்றில் மூசாவின் ஹஜ் பயணம் மிக முக்கியமான தருணமாக கருதப்படுகிறது.[9] மூசாவின் ஆட்சி பொதுவாக மாலியின் பொற்காலம் என்று கருதப்படுகிறது. ஆனால் இந்த கருத்து அவரது ஆட்சி, அரபு மூலங்களால் சிறப்பாக பதிவு செய்யப்பட்டதின் விளைவாக இருக்கலாம்.[10]

மூசாவின் செல்வம்

தொகு

மூசா உலக வரலாற்றின் மிகப்பெரிய பணக்காராக கருதப்படுகிறார்.[11] சில ஆதாரங்கள் அவரது செல்வத்தை 400 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு சமமாக மதிப்பிட்டிருந்தாலும், அவரது உண்மையான செல்வத்தை துல்லியமாக கணக்கிட இயலாது. மான்சா மூசா போன்ற வரலாற்றுப் பிரமுகர்களின் செல்வத்தை ஒப்பிட்டுப் பார்ப்பது கடினம் ஆகும். ஒரு அரசனின் தனிப்பட்ட செல்வத்தை நாட்டின் செல்வத்திலிருந்து பிரிப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. மேலும் மிகவும் மாறுபட்ட சமூகங்களின் செல்வத்தை ஒப்பிடுவதில் சிரமம் உள்ளது.[12] மூசா தனது ஹஜ்ஜிற்கு 18 டன் தங்கத்தை கொண்டு வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.[13] மூசா தனது ராஜ்ஜியத்தில், தங்கம் ஒரு செடியைப் போல வளர்ந்ததாக வதந்திகளைப் பரப்பியதன் மூலம், அவரது இராச்சியத்தில் பரந்த அளவில்லாத செல்வம் இருப்பது போன்ற தோற்றம் உருவாவதை மேலும் ஊக்குவித்தார்.[13]

மேற்கோள்கள்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. Musa's name Kanku Musa means "Musa son of Kanku", but the genealogy may not be literal.[3]
  2. Arabic sources omit Faga Leye, referring to Musa as Musa ibn Abi Bakr. This can be interpreted as meaning either "Musa son of Abu Bakr" or "Musa descendant of Abu Bakr." It is implausible that Abu Bakr was Musa's father, due to the amount of time between Sunjata's reign and Musa's.[5]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மான்சா_மூசா&oldid=3311465" இலிருந்து மீள்விக்கப்பட்டது