ஆன்றி ரெனே ஆல்பர்ட் கை டி மாப்பசான் (Henri René Albert Guy de Maupassant, பிரெஞ்சு பலுக்கல்: gi d(ə) mo.pa.ˈsɑ̃ ; 5 ஆகத்து 1850 – 6 சூலை 1893) 19 ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற சிறுகதை எழுத்தாளர். பிரான்சு நாட்டைச் சேர்ந்த இவர் நவீன சிறுகதை இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராய்க் கருதப்படுகிறார்.ஃபிரான்சின் வடக்கில் உள்ள நார்மாண்டியிலுள்ள துறைமுக நகரம் ஒன்றில் 1850-இல் மாப்பசான் பிறந்தார். இவரது 13 ஆம் வயதில் இவரது பெற்றோரிடையே மணமுறிவு ஏற்பட்டது. மாப்பசானின் தாய் இலக்கிய அறிவும் ஆர்வமும் உடையவர்.

ஆன்றி ரெனே ஆல்பர்ட் கை டி மாப்பசான்
பிறப்புஆன்றி ரெனே ஆல்பர்ட் கை டி மாப்பசான்
( 1850-08-05)5 ஆகத்து 1850
இறப்பு6 சூலை 1893( 1893-07-06) (அகவை 42)
அடக்கத்தலம்Montparnasse Cemetery
தொழில்சிறுகதை எழுத்தாளர்
தேசியம்ஃபிரான்சு
வகைஇயற்கை
கையொப்பம்

பட்டப்படிப்பு முடித்த மாப்பசான் பெர்சியாவிக்கு எதிரான ஃபிரெஞ்சுப் போரில் பங்கேற்றார். பின்னர் ஃபிரெஞ்சு அரசில் எழுத்தராய்ப் பணியமர்ந்த மாப்பசான் நாளிதழ்களில் எழுதத் துவங்கினார்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாப்பசான்&oldid=1443101" இலிருந்து மீள்விக்கப்பட்டது