மாப்பிங்குவாரி

மாப்பிங்குவாரி (யுமா என்றும் அழைக்கப்படுகிறது) என்பது பிரேசிலிய நாட்டுப்புறக்  கதைகளில் கூறப்படும் காடு மற்றும் அதன் விலங்குகளைப் பாதுகாப்பதாகக் கூறப்படும் தொன்ம வேற்றுருவுடைய காட்டில் வாழும் ஆவிகளாகும்.

விளக்கம்

தொகு

மாப்பிங்குவாரி பற்றி  பல்வேறு சித்தரிப்புகள் கூறப்படுகின்றன.1933 க்கு முன், பாரம்பரிய நாட்டுப்புறக் கதைகளில்  முன்னொருபோது மனிதராயிருந்த  ஷாமன் ஒரு உரோமத்தால் மூடப்பட்ட மனித உருவமாக மாறியதாக விவரிக்கிறது.[1] இந்த உருவத்தில் பெரும்பாலும் அதன் அடிவயிற்றில் ஒரு இடைவெளி வாய் இருப்பதாக கூறப்படுகிறது.[2] அதன் கால்கள் பின்னால் திரும்பியதாயுமுள்ளன. அதைக் கண்காணிக்க முயற்சிப்பவர்களைக் குழப்பும் இத்தகைய கால்களைக் கொண்ட உயிரினங்கள் உலகெங்கிலும் உள்ள நாட்டுப்புறக் கதைகளில் காணப்படுகின்றன.[1]

20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், சில புதுவிலங்காய்வு உயிரியலாளர்கள்  மாப்பிங்குவாரி பிக்ஃபூட்டைப் போன்ற அறியப்படாத விலங்குகளாக இருக்கலாம் என்று ஊகித்தனர்.[1]

பிலிசுடோசின் காலத்தின் இறுதியில் அழிந்துவிட்டதாக மதிப்பிடப்பட்ட மந்த அசைவுடைய ஒரு மாபெரும் தரை விலங்கின் சம காலக் காட்சி இது என்று வேறு சிலர் கருதுகின்றனர். [2][3]

கலைச்சொல்

தொகு

பெலிப் பெரேரா வாண்டர் வெல்டனின் கூற்றுப்படி, அதன் பெயர் தூப்பி-குவாரானி மொழிச் சொற்களான "ம்பாப்பே", "பை" மற்றும் "குவாரி" ஆகியவற்றின் கலவையாகும். இதன் பொருள் "வளைந்த கால் [அல்லது] பாதம் கொண்ட ஒரு பொருள்"[4]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Dunning, Brian. "On the Trail of the Mapinguari". Skeptoid. Skeptic Media. பார்க்கப்பட்ட நாள் 15 June 2023.Dunning, Brian. "On the Trail of the Mapinguari". Skeptoid. Skeptic Media. Retrieved 15 June 2023.
  2. 2.0 2.1 Rohter, Larry. "A Huge Amazon Monster Is Only a Myth. Or Is It?". https://www.nytimes.com/2007/07/08/world/americas/08amazon.html. 
  3. Oren, David C. "Does the Endangered Xenarthran Fauna of Amazonia Include Remnant Ground Sloths?", Edentata (June 2001) p. 2-5
  4. Felipe Ferreira Vander Velden "Sobre caes e indios: domesticidade, classificacao zoologica e relacao humano-animal entre os Karitiana", Revista de Antropología 15 (2009) p. 125–143
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாப்பிங்குவாரி&oldid=4052720" இலிருந்து மீள்விக்கப்பட்டது