மாய வண்ணன்
மாயவண்ணன் என்பது திருமாலைக் குறிக்கும் பெயர்களில் ஒன்று. இப் பெயர் கொண்ட ஒருவர் சேர மன்னன் செல்வக் கடுங்கோ வாழியாதன் உள்ளம் குடிகொண்ட பெருமான். வேள்வியாசான் எனவும் தெரிகிறது. இவரை இந்தச் சேரன் தன் அமைச்சராகவும் வைத்துக்கொண்டான். இவருக்கு ஒகந்தூர் என்னும் ஊரையே வழங்கிப் பெருமைப்படுத்தினான். [1]
அடிக்குறிப்பு
தொகு- ↑ இடனுடை வேள்வி ஆக்கிய பொழுதின் அறத்துறை போகி, மாயவண்ணனை மனன் உறப் பெற்று, அவற்கு ஓத்திற நெல்லின் ஒகந்தூர் ஈந்து, புரோசு மயக்கி, ... விளங்கிய செல்வக் கடுங்கோ வாழியாதன். (பதிற்றுப்பத்து, பதிகம் 7)