மாரியம்மன் கோவில், உதகை
மாரியம்மன் கோவில் (The Mariamman temple) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள உதகமண்டலம் அல்லது ஊட்டி மற்றும் உதகை என்று அழைக்கப்படும் மாவட்ட நகராட்சிக்கு அருகில் இக்கோவில் அமைந்துள்ளது.[1] மாரியம்மன் அப்பகுதி மக்களின் உள்ளூர் தெய்வம் ஆகும். [2][3]இந்துக்களின் மழைக்கடவுளான மாரியம்மனுக்கு இக்கோவில் அர்பணிக்கப்பட்டுள்ளது.
மாரியம்மன் கோவில், ஊட்டி | |
---|---|
மாரியம்மன் | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ் நாடு |
மாவட்டம்: | நீலகிரி |
அமைவு: | உதகை |
ஏற்றம்: | 2,240 m (7,349 அடி) |
ஆள்கூறுகள்: | 11°24′44″N 76°42′46″E / 11.412142°N 76.712728°E |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிட கட்டிடக்கலை |
இணையதளம்: | www.ootymariammantemple.com |
புராணம்
தொகுமாரியம்மன் கோவில் உருவாக காரணமான ஒரு நிகழ்வு கூறப்படுகிறது. கோயம்பத்தூரிலிருந்து ஒரு வணிகர் செவ்வாய்க் கிழமை தோறும் ஊட்டிபழங்குடி மக்களிடம் வந்து வியாபாரம் செய்வது வழக்கம். ஒரு செவ்வாய்க்கிழமை வடக்கிலிருந்து இரண்டு சகோதரிகள் சந்தைக்கு வந்தனர். அவர்கள் தெய்வீக தோற்றம் உடையவர்களாக தோன்றினர். அச்சகோதரிகள் தங்குவற்கு இடம் கேட்டனர். அதற்கு அவர்களை அருகிலுள்ள மரத்தடியில் தங்குமாறு கூறினார்கள். அம்மக்களுக்கு தெரியவில்லை இச்சகோதரிகள் தெய்வங்கள் என்று. அப்போது திடீரென்று ஒரு மின்னல் போன்ற வெளிச்சம் தோன்றி இருவரும் மறைந்து போனார்கள். இச்சம்பவத்திற்கு பிறகு அம்மக்கள் புரிந்து கொண்டு இத்தெய்வங்களுக்கு கோவில் கட்டினர். அவர்களுக்கு மாரியம்மன் மற்றும் காளியம்மன் என்று பெயரிட்டனர். அக்கோவில் தான் தற்போது மாரியம்மன் கோவில் என அழைக்கப்படுகிறது. இரண்டு தெய்வங்களும் ஒரே இடத்தில் இங்குதான் காணமுடியும். தற்போது ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் இச்சந்தை மாரியம்மன் கோவிலுக்கு மக்கள் வந்து வணங்கிவிட்டு செல்கின்றனர்.[4]
கோவில் திருவிழா
தொகுஊட்டி மாரியம்மன் கோவில் திருவிழா ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் கொண்டாடப்படுகிறது. [5] அம்மன் தெய்வமான மாரியம்மன், காளியம்மன் வடிவத்தில் வணங்கப்படுகிறது. சீத்தால கௌரி அல்லது மகமாயி என மாரியம்மன் எல்லாராலும் அழைக்கப்படுகிறாள். இத்திருவிழா மாரியம்மன் தெய்வத்துக்கு மரியாதை செலுத்துவதற்காக வருடந்தோறும் கொண்டாடப்படுகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து அம்மன் அருள் பெற்றுச் செல்கின்றனர். இத்திருவிழாவின் முக்கியமான நிகழ்வு பக்தர்கள் வெறும்காலுடன் தீமிதித்து அம்மனுக்கு தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவர். பக்தர்கள் அரிசிமாவில் மாவிளக்கு ஏற்றி அம்மனுக்கு தங்கள் காணிக்கையை செலுத்துவர்.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "LIST OF PLACES OF WORSHIP" (PDF). Nilgiris.tn.gov.in. Archived from the original (PDF) on 2011-07-24. பார்க்கப்பட்ட நாள் 2011-02-02.
- ↑ "Fairs and Festivals". Ooty.net. பார்க்கப்பட்ட நாள் 2011-02-02.
- ↑ "Nilgiris - Festivals". Nilgiris.com. பார்க்கப்பட்ட நாள் 2011-02-02.
- ↑ "Ooty-Festivals". Ootymariammantemple.com. Archived from the original on 19 மார்ச்சு 2012. பார்க்கப்பட்ட நாள் 21 அக்டோபர் 2012.
- ↑ "Ooty-Festivals". Ooty.com. பார்க்கப்பட்ட நாள் 2011-02-02.
- ↑ "Ooty Mariamman Temple Festival". Mapsofindia.com. Archived from the original on 29 சூன் 2011. பார்க்கப்பட்ட நாள் 2 பெப்பிரவரி 2011.