மாரியம்மாள் பாலமுருகன்
மாரியம்மாள் பாலமுருகன் (Mariyammal Balamurugan) (பிறப்பு: ஏப்ரல் 14,2003) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு இந்திய தொழில்முறை காற்பந்தாட்ட வீராங்கனை ஆவார். நடுக்கள வீரரான இவர் இந்திய மகளிர் லீக் மற்றும் இந்திய மகளிர் தேசிய கால்பந்து ஆகியவற்றில் கிக்ஸ்டார்ட் அணிக்காக விளையாடுகிறார். சேது எஃப்சி மற்றும் ஈஸ்ட் பெங்கால் அணிக்காகவும் விளையாடியுள்ளார்.
சுய தகவல்கள் | |||
---|---|---|---|
பிறந்த நாள் | 14 ஏப்ரல் 2003 | ||
பிறந்த இடம் | சேலம், தமிழ்நாடு, இந்தியா | ||
ஆடும் நிலை(கள்) | நடுக்கள வீரர் | ||
கழகத் தகவல்கள் | |||
தற்போதைய கழகம் | கிக்ஸ்டார்ட் கால்பந்து அணி | ||
முதுநிலை வாழ்வழி* | |||
ஆண்டுகள் | கழகம் | தோற். | (கோல்) |
சேது கால்பந்து அணி | |||
2022–2023 | கிக்ஸ்டார்ட் அணி | ||
2023–2024 | ஈஸ்ட் பெங்கால் அணி | ||
2024– | கிக்ஸ்டார்ட் அணி | ||
பன்னாட்டு வாழ்வழி‡ | |||
2020 | 17 வயதிற்குட்படோருக்கான இந்திய மகளிர் அணி | ||
2018–2021 | 20 வயதிற்குட்படோருக்கான இந்திய மகளிர் அணி | ||
2021– | தேசிய கால்பந்து அணி | 3 | (0) |
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும் அன்று சேகரிக்கப்பட்டது. ‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 24 செப்டம்பர் 2023 அன்று சேகரிக்கப்பட்டது. |
ஆரம்பகால வாழ்க்கை.
தொகுதமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியம்மாள் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.[1] இவர் இளம் வயதிலேயே கால்பந்து விளையாடத் தொடங்கினார். மேலும் 2018 கேலோ இந்திய விளையாட்டுப் போட்டிகளில் இருந்து விளையாட ஆரம்பித்தார்.[2]
தொழில் வாழ்க்கை
தொகுமாரியம்மாள் 16 வயதுக்குட்பட்டோருக்கான தகுதிப் போட்டிகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். பிரேசில் அணிக்கு எதிரான மனௌசில் நடைபெற்ற 2021 சர்வதேச மகளிர் கால்பந்து போட்டியில் வயது வந்தோருக்கான சவர்வதேசப் போட்டியில் அறிமுகமானார்.[2] ஜனவரி 2022 இல், ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் மகளிர் ஆசிய கோப்பையில் விளையாட இந்திய அணியில் இடம் பெற்றார்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Mariyammal Balamurugan". the-aiff.com. பார்க்கப்பட்ட நாள் 2023-12-08.
- ↑ 2.0 2.1 Bontra, Soumya (2022-01-20). "Meet the 23 players who can create history for Indian football". thebridge.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-18.
- ↑ "Hosts India name 23-member squad for AFC Women's Asian Cup, recovering Bala Devi misses out". English.Mathrubhumi (in ஆங்கிலம்). 2022-01-11. பார்க்கப்பட்ட நாள் 2023-11-06.