மார்கரெட் ஈ. நைட்

அமெரிக்கப் பெண் புதுமைப்புனைவாளர்

மார்கரெட் ஈ. நைட் (ஃபிப்ரவரி 14, 1838 – அக்தோபர் 12, 1914) ஓர் அமெரிக்கப் பெண் புதுமைப்புனைவாளர். இவர் "19ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த புதுமைப்புனைவாளர்" ஆவார்.[1]

மார்கரெட் ஈ. நைட்
பிறப்பு14 பெப்பிரவரி 1838
York
இறப்பு12 அக்டோபர் 1914 (அகவை 76)
கல்லறைNewton Cemetery
பணிபுத்தாக்குனர்
விருதுகள்National Inventors Hall of Fame

இவர் ஜேம்சு நைட் என்பவருக்கும் அன்னா டீல் என்பவருக்கும் மைனில் உள்ள யார்க்கில் பிறந்தார். மார்கரெட் சிறுமியாக இருந்தபோதே ஜேம்சு நைட் இறந்துவிட்டார். 12ஆம் அகவை வரை இவர் பள்ளிக்குச் சென்றார். பிறகு 12ஆம் அகவையில் இருந்து 1856 வரை ஒரு பருத்தியாலையில் பணிபுரிந்தார்.[சான்று தேவை] இவர் 1868இல் மசாசூசட்டில் உள்ள சுப்பிரிங்ஃபீல்டில் வாழ்ந்தபோது, இன்று கடைகளில் பெருவழக்கில் உள்ள பழுப்புநிறத் தாள்பைகளைச் செய்யும், அதாவது தாளை மடித்தொட்டி நேரடியாகப் தட்டைப் பைகளைச் செய்யும், எந்திரத்தைப் புனைந்தார்.

நைட் இந்த எந்திரத்துக்கான மரப்படிமத்தை உருவாக்கினார். ஆனால் உரிமத்துக்கு விண்ணப்பிக்க நன்கு வேலைசெய்யும் இரும்புப் படிமம் ஒன்றைச் செய்ய விரும்பினார். நைட் இரும்பு எந்திரப்படிமத்தைச் செய்த பணிப்பட்டறையின் சொந்தக்காரரான சார்லசு அன்னான் இவரது வடிவமைப்பைத் திருடி அதற்கு உரிமமும் பெற்றுவிட்டார். நைட் ஒரு [[குறுக்கீட்டு வழக்கைத்/உரிம வழக்கைத் தொடுத்து அதில் வெற்றியும் பெற்றார். இவருக்கு வழக்கு முடிந்து 1871இல் உரிமம் வழங்கப்பட்டது.[2] With a Massachusetts business man, Knight established the Eastern Paper Bag Co. and received royalties.

இவர் பற்பல புதுமைப்புனைவுகளைச் செய்துள்ளார். அவையாவன: எண்ணிடும் எந்திரம்,சாளரச் சட்டகமும் நெம்பும் ஆகும் இவை 1894ஆம் ஆண்டில் பதிவுரிமம் வழங்கப்பட்டன.மேலும் சுழற்பொறிகள் சார்ந்த பல கருவிகளும் 1902-1915 கால இடைவெளியில் உரிமம் தரப்பட்டன.[3] Knight's original bag-making machine is in the Smithsonian Museum in Washington, D.C.. மார்கரெட் மணமே முடிக்கவில்லை. இவர் 1914 அக்டோபர் 12இல் தன் 76ஆம் அகவையில் இயற்கை எய்தினார்.

இவர் 1871இல் அரசுத் தகைமைப் பட்டய அணி விருது விக்டோரியா அரசி அவர்களால் வழங்கப்பட்டார்.[4][better source needed] அமெரிக்கப் பட்டயம் வழங்கப்பட்ட முதல் பெண்மணி எனும் பொறிப்பும் 87ஆம் ஆண்டின் அமெரிக்க உரிமம் பெற்றவர் எனும் உரையும் ஃபிரேமிங்காமில் ஓலிசு தெருவில் உள்ள கர்ரி குடிலில் தொங்குகிறது. என்றாலும் முதல் அமெரிக்க உரிமம் பெற்ற பெண்மணி இவரல்ல. தொழிலக அதிபரான சாமுவேல் சிலேட்டரின் மனைவியான அன்னா வில்கின்சன் சிலேட்டரே முதல் அமெரிக்க உரிமம்பெற்ற பெண்மணியாவார்.: இவர் இரட்டைப் புரி திருகை 1793இலேயே உருவாக்கி அதற்கு அவ்வாண்டே உரிமம் வழங்கப்பட்டுள்ளார்.[5] நைட் 2006இல் தேசியப் புதுமைப்புனைவாளர்களின் புகழ்முற்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.[6]

உரிமங்கள்

தொகு

மற்ற ஊடகங்கள்

தொகு
  • McCully, Emily Arnold. மேன்மைசால் மேட்டி: மார்கரெட் ஈ. நைட் புதுமைப்புனைவாளர் ஆனார்?. Farrar, Straus and Giroux, 2006. 32pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-374-34810-3. (இது 2007இல் "மிகச்சிறந்த சிறுமியர் பெண்ணிய நூலாகத்" தேர்வு செய்யப்பட்டு அமெரிக்க நூலகக் கழக அமெலியா பூமர்த் திட்டப் பெண்ணிய வல்லுநர் குழுவால் விருது வழங்கப்பட்டது.)

மேற்கோள்கள்

தொகு
  1. Petroski, Henry (2003). Small Things Considered. New York: Vintage Books. p. 101. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4000-3293-8.
  2. வார்ப்புரு:அமெரிக்க உரிமம் தாள்பை எந்திரங்களின் மேம்பாடு, July 11, 1871.
  3. "Knight, Margaret E." Encyclopædia Britannica 2005 Encyclopædia Britannica Premium Svs - article 9125831.
  4. Challoner, Jack. (editor) உலகை மாற்றிய 1001 புதுமைப்புனைவுகள் 2009 – தட்டை அடித் தாள்பை (1868), p 381.
  5. "History Detectives: Women inventors". PBS.
  6. "Inventor profile". National Inventors Hall of Fame. Archived from the original on 2016-05-06. பார்க்கப்பட்ட நாள் 2015-09-06.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்கரெட்_ஈ._நைட்&oldid=4025273" இலிருந்து மீள்விக்கப்பட்டது