மார்கரெட் கொங்கே

மார்கரெட் கொங்கே (Margaret Conkey) (பிறப்பு 1943) ஒரு தொல்லியலாளர்.[1]

மார்கரெட் கொங்கே
பிறப்பு1943
பணிமானிடவியலர்
வேலை வழங்குபவர்
விருதுகள்Fellow of the American Association for the Advancement of Science, Huxley Memorial Medal

வாழ்க்கை

தொகு

கொங்கே 1965இல் மவுண்ட் ஓல்யோக் கல்லூரியில் பட்டம் பெற்றார்.[1] இவர் கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்கேலியில் மாந்தரினவியல் (Anthropology) பேராசிரியராகப் பணிபுரிந்தார். அப்போது இவர் அப்பல்கலைக்கழகத்தின் தொல்லியல் ஆய்வு இறுவன இயக்குநராகவும் மாந்தரினவியல் கட்டிலின் 1960க்கான தகைமைப் பேராசிரியராகவும் இருந்தார்.[2] அங்கு அவரது ஆய்வு, பிரெஞ்சு பைரெனீசுகள் பற்றியதாக அமைந்தது. இவர் பின்னைப் பழங்கற்காலக் கற்கருவிப் பரவலைப் பற்றி விரிவாக ஆய்வு செய்தார்.

இவர் தொல்லியலில் முதன்முதலாகப் பெண்ணியக் கோட்பாட்டைப் பயன்படுத்தினார். எனவே இவர் பெண்ணியத் தொல்லியல், பாலினத் தொல்லியல் ஆகிய தொல்லியலின் துணைப்புலங்களின் முன்னோடியாவார்.[1] இவரது அண்மை ஆய்வு 40,000-15,000 இடைப்பட்ட தெற்கு பிரான்சு பழங்கற்காலக் கலை விளக்கப் பகுப்பாய்வு ஆகும் இவர் குகையோவியங்கள் ஆண்களின் நடைமுறையாக இருந்தது என்பதையும் அது ஒரு பரிவு மந்திரப்பணி என்பதையும் இப்போது இவர் கேள்விக்குள்ளாக்கியுள்ளார்.[1]

பேராசிரியர் கொங்கே 2009இல் அமெரிக்கத் தொல்லியல் கழகத்தின் தலைவரானார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Haviland, William; Walrath, Dana & Prins, Harald (2007) Evolution and Prehistory: The Human Challenge, Wadsworth, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-495-38190-7, p. 210
  2. "Margaret Conkey, Professor பரணிடப்பட்டது 2012-04-22 at the வந்தவழி இயந்திரம்", University of California Berkely, retrieved 2011-07-12
  3. Pringle, Heather (2011) "Smithsonian Shipwreck Exhibit Draws Fire From Archaeologists பரணிடப்பட்டது 2011-05-15 at the வந்தவழி இயந்திரம்", Science, 10 March 2011, retrieved 2011-07-12
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்கரெட்_கொங்கே&oldid=3224513" இலிருந்து மீள்விக்கப்பட்டது