மார்கரெட் பிளேம்சுட்டீடு

ஆங்கிலேய வானியலாளர்

மார்கரெட் பிளேம்சுட்டீடு (Margaret Flamsteed) ( குக்கே எனப்பட்டவர்) (அண். 1670-1730) பிரித்தானியாவில் வானியலோடு தொடர்புகொண்ட முதல் பெண்மணியாவார்.[1][2][3] இவர் அரசு வானியலாளர் பிளேம்சுட்டீடை மணந்தார், ஜான் பிளேம்சுட்டீடின் இறப்புக்குப் பிறகு அவரது மிகவும் சிறந்த பணிகளைப் பதித்து வெளியிட்டார்: பிரித்தானியக் கொயெலெசுட்டிசு வரலாறு (1725), கொயெலெசுட்டிசு அட்டவணை (1729) எனும் இந்த இரு நூல்களும் இவரின்றி வெளிவந்திருக்க முடியாது.

வானியலாரின் தோட்டம் எனும் கெவின்கோடின் நாடகத்தில் மார்கரெட் பிளேம்சுட்டீடு ஒரு பாத்திரமாவார்.[4]

இளமை

தொகு

சட்டத் தரணியின் மகளான இவர் எழுத்தும் எண்ணும் கசடறக் கற்ற பெண்மணி ஆவார்.

அரசு வானியலாருடனான வாழ்க்கை

தொகு

திருமணம் ஆகும்போது மார்கரெட் பிளேம்சுட்டீடுக்கு அகவை22. அப்போது ஜான் பிளேம்சுட்டீடின் அகவை ஆகும்; இருவரும் 27 ஆண்டுகள் மணவாழ்க்கையில் வாழ்ந்துள்ளனர்.

திருமணத்துக்குப் பிறகான மார்கரெட்டின் கைக்குறிப்பேடுகள், கணிதவியலையும் வானியலையும் கற்பதில் அவருக்கு இருந்த ஆர்வத்தையும் வல்லமையையும் காட்டுகின்றன. பிளேம்சுட்டீடின் குறிப்புகளில் ஒரு பதிவு, தான் தன் நோக்கீடுகளை மனைவியின் உதவியுடன் மட்டும் செய்ததாகக் குறிப்பிடுகிறது. இதுவும் பிற சான்றுகளும் மார்கரெட் தொடர்ந்து அவரது உதவியாளராகப் பணிபுரிந்துள்ளமையையும் மார்கரெட் ஆர்வமுடன் கண்வரின் இரவு நோக்கீடுகளில் பங்கேற்றதையும் காட்டுகின்றன. இவர் பகலில் கணவருக்கான கடிதங்களை எழுதியும் படியெடுத்தும் வந்துள்ளார். குறிப்பாக கணவருக்குக் கைத்தடுமாற்றம் ஏற்பட்ட பிறகு இப்பணி கூடியுள்ளது.

ஜானின் வீட்டுப் பொறுப்பும் அவரது உதவியாளர்கள், மாணவர்கள், அவரைப் பார்க்க வருபவர்கள் சார்ந்த கவனிப்புகளும் மார்கரெட்டிடமே இருந்துள்ளது.

ஜான் பிளேம்சுட்டீடு இறப்புக்குப் பிறகு

தொகு
 
தெர்பி அருங்காட்சயகத்தின் கலையரங்கில் உள்ள கொயெலெசுட்டிசு அட்டவணையின் ஒளிப்படப் படி

ஜான் பிளேம்சுட்டீடின் 1719 ஆண்டு இறப்புக்குப் பிறகு, அவரது இருநூல்களின் பதிப்பும் வெளியீடும் மார்கரெட்டின் மேற்பார்வையில் நடந்தேறின. பிரித்தானியக் கொயெலெசுட்டிசு வரலாறு எனும் நூல் 1725 இலும் கொயெலெசுட்டிசு அட்டவணை எனும் நூல் 1729 இலும் மார்கரெட்டால் வெளியிடப்பட்டன. இவ்ருக்கு யோசாப்பு கிறாத்துவைட்டும் ஆபிரகாம் சார்ப்பும் உதவினர். இவர்கள் இருவரும் ஜானின் உதவியாளர்களாக இருந்தவர்கள் ஆவர். இந்த இருநூல்களையும் வெளியிட பேரளவு செலவு ஆகியுள்ளது. தன் கணவரின் தோட்டச் சொத்து சார்ந்த சிக்கலான துறப்பு ந்டவடிக்கைகளுக்கு இடையிலும் 1720 இல் தென்கடல் குமிழி நிறுவனம் சரிந்ததால் தன் பணவைப்புகள் குறைந்துவரும் நிலையிலும் இந்நூல்களைத் தளராமல் மார்கரெட் வெளியிட்டுள்ளார்.

கொயெலெசுட்டிசு அட்டவணை வெளியிட்ட ஒராண்டுக்குள் மார்கரெட் பிளேம்சுட்டீடு தன் 60 ஆகவையில் இறந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. T.), Brück, M. T. (Mary (2009). Women in early British and Irish astronomy : stars and satellites. Royal Astronomical Society. Dordrecht: Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789048124732. இணையக் கணினி நூலக மைய எண் 437347262.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  2. Women, science and medicine 1500-1700 : mothers and sisters of the Royal Society. Hunter, Lynette., Hutton, Sarah, 1948-. Thrupp, Stroud, Gloucestershire: Sutton Pub. 1997. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0750913347. இணையக் கணினி நூலக மைய எண் 37880178.{{cite book}}: CS1 maint: others (link)
  3. "Women at the ROG - Margaret Flamsteed" (in en). Royal Museums Greenwich | UNESCO World Heritage Site In London. 2009-03-24. https://www.rmg.co.uk/discover/behind-the-scenes/blog/women-rog-margaret-flamsteed#K3MCVpFJdID08k4L.99. 
  4. Kevin., Hood (1991). The astronomer's garden ; Beached : two plays. Hood, Kevin. London: Methuen Drama. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0413650804. இணையக் கணினி நூலக மைய எண் 59884801.