மார்க்கவி
மார்க்கவி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 9 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "நேத்ர" என்றழைக்கப்படும் 2 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய தேனுக இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.
இந்த இராகத்தில் ஷட்ஜம், சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
மேற்கோள்கள்
தொகு