தேனுகா (இராகம்)
(தேனுக இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இது தேனுகா இராகத்தைப் பற்றிய கட்டுரை . எழுத்தாளர் தேனுகா குறித்து படிக்க தேனுகா (எழுத்தாளர்)
தேனுகா இராகம், கருநாடக இசையின் 9 ஆவது மேளகர்த்தா இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 9 ஆவது இராகத்திற்குத் துனிபின்னஷட்ஜம் என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.
இலக்கணம்
தொகுஆரோகணம்: | ஸ ரி1 க2 ம1 ப த1 நி3 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி3 த1 ப ம1 க2 ரி1 ஸ |
சிறப்பு அம்சங்கள்
தொகு- இதன் மத்திமத்தை பிரதி மத்திமாக மாற்றினால் இராகம் சுபபந்துவராளி (45) ஆகும்.
- கிரக பேதத்தின் வழியாக இந்த மேளத்தின் ரிஷப, மத்திம, தைவத ஆகிய சுரங்கள் முறையே சித்ராம்பரி (61), சண்முகப்பிரியா (56), சூலினி (35) ஆகிய மேளங்களைத் தோற்றுவிக்கின்றன (மூர்ச்சனாகாரக மேளம்).
- பல ஜன்ய இராகங்களைக் கொண்ட மேளகர்த்தா.
வகை | உருப்படி | இயற்றியவர் | தாளம் |
---|---|---|---|
கிருதி | தெலியலேதுராமா | தியாகராஜ சுவாமிகள் | ஆதி |
கிருதி | கருணைக்கடலே | கோடீஸ்வர ஐயர் | ஆதி |
கிருதி | கேட்டவரம் அருளும் | அம்புஜம் கிருஷ்ணா | ஆதி |
கிருதி | இனி என்னக்குறை | பெரியசாமித் தூரன் | ஆதி |
கிருதி | ராமாபிராமா | வீணை சேஷண்ணா | ரூபகம் |
கிருதி | தெரிசனமே | முத்துத் தாண்டவர் | ரூபகம் |
கிருதி | அரசேயான் | இலட்சுமணப்பிள்ளை | ரூபகம் |
கிருதி | ஸ்ரீகுருகுஹ மூர்த்தி | பொன்னையா பிள்ளை | ரூபகம் |
கிருதி | காமதேனுகா | சுத்தானந்த பாரதியார் | திஸ்ர ஜம்பை |
ஜன்ய இராகங்கள்
தொகுதேனுகாவின் ஜன்ய இராகங்கள் இவை.
மேற்கோள்கள்
தொகு- ↑ டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006); வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.