மார்க் டோபே

மார்க் ஜார்ஜ் டோபே என்னும் முழுப் பெயர் கொண்ட மார்க் டோபே ஒரு அமெரிக்கப் பண்பியல் வெளிப்பாட்டிய ஓவியர் ஆவார். இவர் விஸ்கான்சினில் உள்ள சென்டர்வில்லி என்னும் இடத்தில் பிறந்தார். ஐக்கிய அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பரவலாக அறியப்பட்ட இவர் வடமேற்கு ஓவியர்களுள் குறிப்பிடத்தக்கவர் ஆவார். வயது முதிர்ந்தவரும், அனுபவம் பெற்றவருமான டோபே, மற்றவர்களிடம் செல்வாக்குச் செலுத்தக்கூடியவராக இருந்தார். ஒரு நண்பராகவும், வழிகாட்டுபவராகவும், தத்துவம், கிழக்கத்திய சமயங்கள் ஆகியவற்றின்பால் அவர் கொண்டிருந்த ஆர்வத்தை அவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

மார்க் டோபே
தேசியம்அமெரிக்கர்
கல்விசிக்காகோ ஓவியக் கழகம்
அறியப்படுவதுஓவியம்
அரசியல் இயக்கம்பண்பியல் வெளிப்பாட்டியம் Northwest School
புரவலர்(கள்)சோ துசான்னே
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்க்_டோபே&oldid=2211539" இருந்து மீள்விக்கப்பட்டது