மார்க் மோபியஸ்

மார்க் மோபியஸ் (Joseph Mark Mobius, பிறப்பு: 17 ஆகத்து 1936) என்பவர் பிராங்க்ளின்  டெம்பிள்டன் முதலீட்டு நிறுவனம் என்ற உலகளாவிய பெரும் குழுமத்தின் நிதி மேலாளர் ஆவார். உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த நிதி நிறுவனத்தின் 50 க்கும் மேற்பட்ட  பரஸ்பர நிதிகளை மேலாண்மை செய்து வருகிறார்.[1]

மார்க் மோபியஸ்
பிறப்பு17 ஆகத்து 1936 (அகவை 88)
Hempstead
படிப்புமுனைவர் பட்டம்
பணிபொருளியலாளர்கள், வணிகர்

இளமைக் காலம்

தொகு

செருமனி மற்றும் புவேர்ட்டோ ரிக்கோ பெற்றோருக்கு மகனாக அமெரிக்காவின் நியூயார்க்கில் பிறந்தார். பாஸ்டன் பல்கலைக் கழகத்தில் பயின்று இளங்கலை பட்டமும் எம். எஸ். பட்டமும் பெற்றார். பின்னர் 1966 ஆம் ஆண்டில் எம்ஐடி யில் பொருளியல் ஆய்வறிஞர் பட்டம் பெற்றார். பிராங்க்ளின் டெம்பிள்டன் நிறுவனத்தில் 1987 ஆம் ஆண்டில் சேர்ந்தார்.

எழுதிய நூல்கள்

தொகு

சீனாவுடன் வர்த்தகம், எழுச்சியுறும் சந்தையில் முதலீடு செய்ய வழிகாட்டி, ஊதியத்திற்கான கடவுச் சீட்டு  போன்ற பத்துக்கும் மேல் நூல்களை எழுதியுள்ளார்.

பெற்ற சிறப்புகள்

தொகு
  • ஆசியாமணி என்ற இதழ் இவரை 2006 ஆம் ஆண்டில் 100 செல்வாக்கு மிக்க மனிதர்கள் என்னும் பட்டியலில்  சேர்த்துள்ளது.
  • நிதி மற்றும் தொழில் தொடர்பான பல தொலைக்காட்சிகளில் நேர்காணல் மற்றும் பேச்சு நிகழ்த்தியுள்ளார்.
  • 2011இல்  பூளும்பர்க் மார்க்கட் இதழ் இவரை 50 செல்வாக்கு மிக்க மனிதர்களில் ஒருவராக கவுரவப்படுத்தியது.
  • 1999இல் தனியாரத் துறை சார்பாக அறிவுரை வழங்கும் குழுவில் உறுப்பினராக உலக வங்கியால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உசாத்துணை

தொகு

மேலும் பார்க்க

தொகு

http://mobius.blog.franklintempleton.com/

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்க்_மோபியஸ்&oldid=3095061" இலிருந்து மீள்விக்கப்பட்டது