மார்ட்டின் லூதர் கிங் நினைவகம்
மார்ட்டின் லூதர் கிங் நினைவகம் (Martin Luther King, Jr. Memorial) என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளின் தலைநகரான வாஷிங்டன் நகரில், மேற்கு போட்டமாக் பூங்காவில் தேசிய விரிசாலை என்றழைக்கப்படுகின்ற பேரெல்லைக்குள் அமைந்துள்ள புகழ்பெற்ற நினைவு நிறுவனம் ஆகும். [1]
ஆள்கூறுகள் | 38°53′10″N 77°2′39″W / 38.88611°N 77.04417°W |
---|---|
இடம் | வாஷிங்டன்: 1964 இண்டிப்பெண்டன்சு அவென்யு, தென்மேற்கு, வாஷிங்டன் |
வடிவமைப்பாளர் | லேய் ஈக்சின் |
கட்டுமானப் பொருள் | வெண் கருங்கல் |
உயரம் | 30 அடி (9.1 m) |
முடிவுற்ற நாள் | 2011 |
திறக்கப்பட்ட நாள் | அக்டோபர் 16, 2011 |
அர்ப்பணிப்பு | மார்ட்டின் லூதர் கிங், இளையவர் |
Official website |
இந்த நினைவகம் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் பூங்காக்கள் அமைப்பின் 395ஆம் செயல்திட்டம் ஆகும்.[2]
அமைவிடம்
தொகுஇந்த நினைவகம் வாஷிங்டன் நகரில், டைடல் பேசின் என்றழைக்கப்படும் ஏரிக்கரையின் வடகிழக்குப் பகுதில், பிராங்ளின் டேலனோ ரூசவெல்ட் நினைவகத்தின் அருகின் உள்ளது. அதிலிருந்து நோக்கினால் வடமேற்குப் பகுதில் லிங்கன் நினைவகமும், தென்கிழக்குப் பகுதியில் ஜெபர்சன் நினைவகமும் அமைந்துள்ளதைக் கண்டு இன்புறலாம்.
மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் நினைவகம் அமைந்துள்ள முகவரி 1964 இண்டிப்பெண்டன்சு சாலை என்பதாகும். 1963இல் டாக்டர் கிங் துப்பாக்கிக் குண்டுக்கு இரையானதைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டில் குடிமைசார் உரிமைகளுக்கான மசோதா சட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டாகிய 1964ஐ முகவரியாக வைத்துள்ளார்கள். [3]
நினைவக நிலப்பகுதி
தொகுமார்ட்டின் லூதர் கிங் அவர்களின் நினைவகம் அமைந்திருக்கும் பூங்கா நான்கு ஏக்கர் பரப்பளவு கொண்டது. சுமார் 20 ஆண்டுகள் தயாரிப்புக் காலத்திற்குப் பின்னரே இந்த நினைவகம் கட்டி எழுப்பப்பட்டது. இது பொதுமக்கள் பார்வைக்கு 2011ஆம் ஆண்டு, ஆகத்து 22ஆம் நாள் திறந்துவைக்கப்பட்டது.[4][5]
மார்ட்டின் லூதர் கிங்கின் புகழ்பெற்ற உரை
தொகு1963ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 22ஆம் நாள், லிங்கன் நினைவகத்தின் படிக்கட்டின் மேல் நின்றுகொண்டு, பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் மார்ட்டின் லூதர் கிங் "கனவொன்று கண்டேன்" (I Have a Dream) என்னும் புகழ்மிற்ற உரையை ஆற்றினார். அந்த உரையின் 48ஆம் ஆண்டு நினைவான 2011, ஆகத்து 22ஆம் நாள் அன்று அந்நினைவகத்தைத் திறந்துவைப்பதாகத் திட்டமிடப்பட்டிருந்தது.[6] ஆனால் அப்போது சுழற்காற்று ஐரீன் பெரும் சேதம் விளைவித்ததால் நினைவகத் திறப்பு விழா அக்டோபர் 16ஆம் நாளுக்குத் தள்ளிவைக்கப்பட்டது. ஆப்பிரிக்க-அமெரிக்க மக்களின் குடிமை உரிமைகளை நிலைநாட்டுவதற்கு ஆதரவாக 1995 அக்டோபர் 16ஆம் நாள் நடந்த "பத்து இலட்சம் மனிதர் உர்வலம்" (Million Man March) என்னும் நிகழ்ச்சியின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் அது. அந்த நாளில் மார்ட்டின் லூதர் கிங் நினைவகம் திறந்துவைக்கப்பட்டது.[7][8][9]
மார்ட்டின் லூதர் கிங் வரலாறு
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ "The National Mall". [http://www.nps.gov/nationalmallplan/ National Mall Plan] (PDF). Vol. Foundation statement for the National Mall and Pennsylvania Avenue National Historic Park. National Park Service. pp. 6–10. பார்க்கப்பட்ட நாள் 2011-05-11.
{{cite book}}
: External link in
(help)|title=
- ↑ Adam Fetcher, David Barna, Carol Johnson (2011-08-29). "National Park Service Press Release: Martin Luther King, Jr. Memorial Becomes 395th National Park". nps.gov. National Park Service. பார்க்கப்பட்ட நாள் 2011-09-01.
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ "Site Location - Build the Dream". Martin Luther King, Jr. National Memorial Project Foundation, Inc. Archived from the original on 2012-08-05. பார்க்கப்பட்ட நாள் 2011-09-10.
- ↑ Tavernise, Sabrina (2011-08-23). "A Dream Fulfilled, Martin Luther King Memorial Opens". New York Times. http://www.nytimes.com/2011/08/23/us/23mlk.html?_r=1&smid=fb-nytimes&WT.mc_id=US-SM-E-FB-SM-LIN-ADF-082311-NYT-NA&WT.mc_ev=click.
- ↑ Cooper, Rachel. "Martin Luther King, Jr. National Memorial in Washington, DC: Building a Memorial Honoring Martin Luther King, Jr". About.com, a part of The New York Times Company. Archived from the original on 2017-04-01. பார்க்கப்பட்ட நாள் 2011-08-24.
{{cite web}}
: External link in
(help)|publisher=
- ↑ "Lincoln Memorial". We Shall Overcome: Historic Places of the Civil Rights Movement: A National Register of Historic Places Travel Itinerary. National Park Service. பார்க்கப்பட்ட நாள் 2011-09-14.
{{cite web}}
: External link in
(help)|work=
- ↑ Associated Press (August 25, 2011). "Dedication of MLK Memorial postponed by hurricane". USA Today. http://www.usatoday.com/news/nation/2011-08-25-king-memorial-dedication-postponed_n.htm. பார்த்த நாள்: 2011-08-25.
- ↑ Weil, Martin (2011-09-11). "MLK memorial dedication set for Oct. 16". Post Local (தி வாசிங்டன் போஸ்ட்). http://www.washingtonpost.com/local/mlk-memorial-dedication-set-for-oct-16/2011/09/11/gIQAYCXXLK_story.html. பார்த்த நாள்: 2011-09-12.
- ↑ Associated Press (2011-09-14). "New date set for MLK memorial dedication". CBSNEWS. http://www.cbsnews.com/stories/2011/09/14/national/main20106087.shtml. பார்த்த நாள்: 2011-09-14.
வெளி இணைப்புகள்
தொகு- Official NPS website
- Memorial Foundation and fundraising website
- Martin Luther King, Jr. Memorial Virtual Tour
- Public Law 104-333 Congressional authorization for memorial to Martin Luther King, Jr.
- Video of President Barack Obama's remarks at official Oct. 16, 2011 memorial dedication