மார்த்தாண்டம் தேனீ வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கம்
மார்த்தாண்டம் தேனீ வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கம் என்பது தமிழ்நாட்டின், கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் இயக்கும் தேன் வளர்போருக்கான ஒரு கூட்டுறவு சங்கம் ஆகும். இந்தியாவின் பழமையான கூட்டுறவுச் சங்கங்களில் ஒன்றாகவும், இந்தியாவின் மிகப் பெரிய தேனீ வளர்ப்போர் சங்கங்களில் ஒன்றாகவும் இது உள்ளது. இச்சங்கம் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின்கீழ் இயங்குகிறது.[1]
வரலாறு
தொகுமார்த்தாண்டம் பகுதியில் தேன் வளர்ப்பில் உற்பத்தி சிறப்பாக இருந்து வந்தது. ஆனால் அதைச் சந்தைப்படுத்துவது சிக்கலானதாக இருந்தது. மேலும் இதில் விற்பனைத் தரகர்களின் ஆதிக்கமே மிகுந்து இருந்தது. இதை முறைப்படுத்தும் நோக்கில், ஸ்பென்ஸர் ஹட்ஸ் என்ற ஐரோப்பியரால் இச்சங்கமானது, திருவிதாங்கூர் கூட்டுறவுச் சங்கச் சட்டத்தின்படி 1937 மார்ச் 19இல் தோற்றுவிக்கப்பட்டது. அக்காலத்தில் மார்த்தாண்டம் பகுதியானது திருவிதாங்கூர் அரசின் ஒரு பகுதியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்கத்தில் இந்தச் சங்கமானது 25 உறுப்பினர்களைக் கொண்டதாக இருந்தது. 2018 ஆண்டுவாக்கில் இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "தேனீ வளர்ப்பு தொழில் மற்றும் சந்தைப்படுத்தும் முறை:". கட்டுரை. தவேப வேளாண் இணைய தளம். பார்க்கப்பட்ட நாள் 10 நவம்பர் 2018.
- ↑ ஆர்.ஜெய்குமார் (3 நவம்பர் 2018). "தேன் ஊற்றெடுக்கும் ஊர்". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 10 நவம்பர் 2018.