மார்த்தா குட்வே
மார்த்தா குட்வே (Martha Goodway) என்பவர் ஓர் அமெரிக்க உலோகவியலாளர் ஆவார். பாரம்பரிய உலோகவியல் தொழிநுட்பங்களான வெட்டியெடுத்தல், உருக்கிப் பிரித்தல், உலோக வேலைகள் ஆகியனவற்றுடன் தொடர்பு கொண்ட தொல்லுலோகவியல் துறையில் இவர் நிபுணர் ஆவார். வரலாற்றுச் சிறப்பு மிக்க முற்கால இசைக்கருவிகளை உலோகக் கம்பிகளால் இசைப்பதில் வல்லுநராகவும் இருந்தார்.
தொடக்ககால வாழ்வும் கல்வியும்
தொகுஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான மாசச்சூசெட்சுவின் ரோசுலிண்டேல் குடியிருப்பில் குட்வே பிறந்தார். 1952 இல் ரோசுலிண்டேல் உயர்நிலைப் பள்ளியில் இவர் கல்வி கற்றார்[1]. பின்னர் மாசச்சூசெட்சு தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் பொது பொறியியலில் 1957 இல் பட்டம் பெற்றார்[2]. இத்தொழில் நுட்பக்கல்வி நிறுவனத்தில் அந்த ஆண்டில் பட்டம் பெற்ற 19 பெண்களில் இவரும் ஒருவராவார்[3].
தொழில்
தொகுகல்லூரி வாழ்க்கைக்குப் பின்னர் இவர் பாதுகாப்பு விஞ்ஞானத்தில் அக்கறை காட்டினார், போசுடனில் உள்ள பொருள்கள் பாதுகாப்பு மற்றும் அறிவியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் வில்லியம் யங்ஙுடன் சேர்ந்து படித்தார். யங்ஙின் தொடர்புகளால் இசுமித்சோனியன் நிறுவனத்திற்காக பாதுகாப்பு ஆலோசக ஆய்வகத்தில் ஒரு உலோகவியலாளராக பணியாற்றினார். அந்தப் பணியிலிருந்த போது பலவிதமான வரலாற்று கலைப்பொருட்களான நீர்புகா கிரேக்கக் கப்பல்கள்[4], எட்ருசிகான் கண்ணாடிகள்[5], 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செருமனியின் கம்பி அணிகலன்கள்[6], விமானத்தைக் கண்டறிந்து முதல் வான்பயணம் பேற்கொண்ட ரைட் சகோதரர்களின் சுழலுறை ஆகியவற்றை ஆய்வு செய்தார்[7]. சுதந்திரச்சிலையை மறுசீரமைப்பு செய்வதற்கான கலந்தாய்வுகளில் ஈடுபட்டார்[8].
வரலாற்று இசைக் கருவிகளில், குறிப்பாக கம்பிக் கருவிகளில் உள்ள உலோகங்களைப் பயன்படுத்துவதில் குட்வே ஆர்வத்தைக் காட்டினார் [9][10]. மேலும் 1987 ஆம் ஆண்டு இந்த தலைப்பில் இணை ஆசிரியராக ஒரு புத்தகமும் எழுதியுள்ளார் [11].
குட்வே தற்போது இசுமித்சோனியன் அருங்காட்சியக பாதுகாப்புக்கழகத்தில் மாண்புடன் ஓய்வு பெற்ற தொல்லுலோகவியலாளர் என்ற பட்டத்தைப் பெற்றவராக உள்ளார் [12].
மேற்கோள்கள்
தொகு- ↑ Roslindale High School Yearbook, 1952.
- ↑ CEE in Focus: Alumni News பரணிடப்பட்டது 2015-12-24 at the வந்தவழி இயந்திரம் (Spring 2011), Civil and Environmental Engineering, Massachusetts Institute of Technology.
- ↑ Lynne Robinson, "Martha Goodway: How History is Made" Journal of Metallurgy 67(9)(2015): 1918–1920. எஆசு:10.1007/s11837-015-1572-8
- ↑ Ivan Amato, "Researchers Swap Material Evidence in Boston" Science 258(5090)(18 December 1992): 1886.
- ↑ Martha Goodway, "Etruscan Mirrors: A Reinterpretation" in Stuart J. Fleming and Helen R. Schenck, eds., History of Technology: The Role of Metals (UPenn Museum of Archaeology 1989): 25. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-924171-95-6
- ↑ Paul Lee, Vignettes: Musings and Reminiscences of a Modern Renaissance Man (iUniverse 2012): 424-425. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4759-5655-9
- ↑ Frank W. Gayle and Martha Goodway, "Precipitation Hardening in the First Aerospace Aluminum Alloy: The Wright Flyer Crankcase" Science 266(5187)(11 November 1994): 1015–1017. DOI: 10.1126/science.266.5187.1015
- ↑ Jonathan Waldman, Rust: The Longest War (Simon & Schuster 2015): 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4516-9161-0
- ↑ Thomas Donahue, The Harpsichord Stringing Handbook (Rowman & Littlefield 2015): 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4422-4345-3
- ↑ Martha Goodway, "Iron" in Igor Kipnis, ed., The Harpsichord and Clavichord: An Encyclopedia (Routledge 2013): 267. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-135-94978-5
- ↑ Martha Goodway and Jay Scott Odell, The Metallurgy of 17th- and 18th-Century Music Wire (Pendragon Press 1987). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-918728-54-8
- ↑ Smithsonian Museum Conservation Institute, "Martha Goodway".