மார்வாரி ஆடு
மார்வாரி ஆடு என்பது இந்தியாவில் உள்ள ஒரு செம்மறியாட்டு இனமாகும். மார்வாரி ஆடு என்ற பெயர் அது உருவான பகுதியில் இருந்து தோன்றியது. இந்த இன ஆடுகள் கருப்புத் தலை பாரசீக ஆடுகளை ஒத்திருக்கிறது என்றாலும், அந்த பாரசீக ஆடுகளைவிட சிறியதாகவும் மற்றும் நல்ல ரோமம் உடையதாக உள்ளது. இவை ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டம், ஜோத்பூர் மாவட்டம், ஜலோரி, நாகாவன் மாவட்டம் உதய்பூர் மாவட்டம் பார்மேர் மாவட்டம் போன்ற மாவட்டங்களில் இருந்து குஜராத்தின் ஜியோரியா பகுதி வரை பரவியுள்ளது. இந்த இன ஆடுகள் ரோம எடை மற்றும் கம்பளத் தரத் தேர்வு போன்றவற்றால் மேம்படுத்தப்பட்டு வருகிறன. [1]
விளக்கம்
தொகுஇவை நீளமான கால்களையும், கருமையான முகத்தையும், அதில் பெரிய மூக்கினையும் கொண்டதாக இருக்கும். இவற்றின் வால் குட்டையாகவும், கூர்மையாகவும் காணப்படும்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ sheep and goat breeds of india
- ↑ "செம்மறியாட்டினங்கள்". அறிமுகம். agritech.tnau.ac.in. பார்க்கப்பட்ட நாள் 17 பெப்ரவரி 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)