மாறன் பொறையனார்

மாறன் பொறையனார் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான ஐந்திணை ஐம்பதை எழுதியவர். மாறன் என்பதை இவருடைய தந்தையின் பெயரெனக் கருதிடில் பொறையனார் என்பதை இவர் இயற்பெயர் எனலாம். இவர் இயற்றிய வேறு நூல்கள் ஏதும் கிடைத்திலது.

மாறன் என்பது பாண்டியர் பெயரையும் பொறையன் என்பது இடையரையும்[1], சேரர் குடிப் பெயரையும் குறிக்கிறது. பொறையன் என்பதற்குப் பொறுமையை உடையவன் என்றும் பொருள் கொள்ளலாம்.

தனது நூலின் முதற் பாடலிலேயே திருமால், முருகன்,சிவன் என்னும் மூன்று கடவுளரின் பெயர்களும் இடம்பெறும் படி பாடியிருப்பமையின் இவர் சமணரோ பௌத்தரோ அல்லர் என்பது புலனாகிறது.[2]

மேற்கோள்

தொகு
  1. பொறையர் கொச்சையோர் முல்லைத்திணையோர் இடையர் - பொதிகை நிகண்டு, மக்கட் பெயர்த் தொகுதி 85.
  2. தமிழ் இணையக்கல்விக் கழகப் பாடப்பகுதி
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாறன்_பொறையனார்&oldid=2717852" இலிருந்து மீள்விக்கப்பட்டது