மாறா சராசரி செலவு

பொருளாதார பதம்

பொருளாதாரத்தில் மாறா சராசரி செலவு (Average Fixed Cost) என்பது உற்பத்தியின் மாறா செலவை உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் எண்ணிக்கையால் வகுக்க கிடைப்பதாகும். உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் அளவு எந்த அளவாக இருந்தாலும் மாறா செலவுகள் ஒரு குறிப்பிட்ட நிலையான அளவின் படியே நிர்ணயிக்கப்படும்.

சராசரி மாறா செலவு என்பது ஓர் அலகு வெளியீட்டிற்கு செய்யப்படும் நிலையான செலவு ஆகும். உற்பத்தி செய்யப்பட்ட அலகுகளின் மொத்த எண்ணிக்கை அதிகரிக்கும்போது சராசரி மாறா செலவு குறைகிறது, ஏனெனில் அதே அளவு நிலையான செலவுகள் அதிக எண்ணிக்கையிலான அலகுகள் வெளியீட்டில் பரவுகின்றன. மாறுபடும் சராசரி செலவுடன், மாறா சராசரி செலவைக் கூட்டும் போது அப்பொருள் உற்பத்திக்கான சராசரி மொத்த செலவு கிடைக்கும்.

உதாரணம்

தொகு

ஓர் ஆடை தயாரிப்பு நிறுவனம் ஆடைகளை உற்பத்தி செய்கிறது என்று வைத்துக் கொள்வோம். உற்பத்தியின் அளவு 5 சட்டைகளிலிருந்து 10 சட்டைகளுக்கு மாறுபடும் போது, நிலையான செலவு 30 டாலர்களாக இருக்கும் [1]. இந்த நிகழ்வில் 5 சட்டைகளை உற்பத்தி செய்வதற்கான சராசரி நிலையான செலவை கணக்கிட 30 டாலர்களை 5 சட்டைகளால் வகுக்கிறோம். கிடைப்பது 6 டாலர்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால் 5 சட்டைகள் தயாரிக்கப்படும் போது, 30 டாலர் என நிலையான செலவு பரவி, ஒரு சட்டைக்கு 6 டாலர்கள் கிடைக்கும். இதேபோல் 10 சட்டைகளை உற்பத்தி செய்வதற்கான சராசரி நிலையான செலவு 30 டாலர்களை 10 சட்டைகளால் வகுக்க 3 டாலர்கள் என கிடைக்கும்.

 
சராசரி மாறா செலவு அட்டவணையும் வரைபடமும்

மேற்கோள்கள்

தொகு
  1. Dorman, Peter (2014). "Production Costs and the Theory of Supply". Microeconomics. Springer Texts in Business and Economics (in ஆங்கிலம்). Springer, Berlin, Heidelberg. pp. 249–274. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-3-642-37434-0_12. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783642374333.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாறா_சராசரி_செலவு&oldid=3582283" இலிருந்து மீள்விக்கப்பட்டது